New Criminal Laws Vs Old Criminal Laws in Tamil | Difference Between BNS and New BNS Act in Tamil | Three New Criminal Laws Explained
ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்த குற்றவியல் சட்டங்களுக்கும் தற்போது புதிதாக மாற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களுக்கும் இடையே ஊழல் வேறுபாடுகள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, புதிதாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. எனவே, இசைச்சட்டம் குறித்து பல்வேறு எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. எனவே, பழைய BNS (Bharatiya Nyaya Sanhita) சட்டத்திற்கும் புதிய சட்டத்திற்கும்
புதிய குற்றவியல் சட்டங்கள் | Three New Criminal Laws Name in Tamil:
- பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) | Bharatiya Nyaya Sanhita (BNS)
- பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) | Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)
- மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் (பிஎஸ்ஏ) | Bharatiya Sakshya Adhiniyam (BSA)
பொது சிவில் சட்டம் என்றால் என்ன.?
New Criminal Laws Vs Old Criminal Laws in Tamil | புதிய குற்றவியல் சட்டதிற்கும் பழைய குற்றவியல் சட்டத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு:
பழைய சட்டம் | புதிய சட்டம் |
FIR நகல் வழங்குவது கட்டாயமில்லை | FIR நகல் வழங்குவது கட்டாயம் |
தொடர்புடைய காவல் நிலையத்தில் மட்டுமே புகார் அளிக்கலாம். | எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். |
காவல்துறையினர் 120 நாட்கள் வரை விசாரணை நடத்தலாம். | காவல் துறையினர் 90 நாட்களுக்குள் விசாரணையை கட்டாயம் முடிக்க வேண்டும். |
காவல் நிலையத்தில் புகார் அளிப்பவர்களுக்கு விசாரணை விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை. | விசாரணை விவரங்களை தெரிவிக்க வேண்டும். |
நீதிபதி அல்லது காவல்துறை முன்பு சாட்சிகள் நேரில் ஆஜராக வேண்டும். | சாட்சிகள், காணொளி மூலம் ஆஜராகலாம். |
அசல் ஆவணங்களை மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். | அசல் ஆவணங்களை நகல்களாக தாக்கல் செய்யலாம். |
காவல்துறை விசாரணை அல்லது ஆய்வின் போது வீடியோ பதிவு அவசியமில்லை. | காவல்துறை விசாரணை அல்லது ஆய்வின் போது வீடியோ பதிவு கட்டாயம். |
சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை. | பாதுகாப்பு தேவையென்றால் சாட்சிகள், காவல்துறையை அணுகலாம். |
கைது செய்யப்படுபவரை 15 நாட்கள் வரை காவலில் விசாரிக்க முடியும். | புதிய சட்டத்தின்படி 40 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை காவலில் வைத்து விசாரிக்க முடிக்க முடிக்க முடியும். |
தப்பி ஓடும் ஆபத்து உள்ளவர்களுக்கு மட்டுமே கைவிலங்கு போட வேண்டும். | புதிய சட்டத்தின்படி, கொலை, பாலியல் வன்கொடுமை குற்றம் புரிந்தவருக்கும் கைவிலங்கு போட வேண்டும். |
கொலை வழக்கு பிரிவு 302 ஆக இருந்தது. | கொலை வழக்கு பிரிவு 101 ஆக மாற்றப்பட்டது. |
மோசடி வழக்கு பிரிவு 420 ஆக இருந்தது. | மோசடி வழக்கு பிரிவு 316 ஆக மாற்றப்பட்டது. |
சட்ட விரோதமாக கூடுதல் வழக்கு பிரிவு 340 ஆக இருந்தது. | சட்ட விரோதமாக கூடுதல் வழக்கு பிரிவு 187 ஆக இருந்தது. |
தேசத்துக்கு எதிராக போர் தொடுத்தல் பிரிவு 121 ஆக இருந்தது. | தேசத்துக்கு எதிராக போர் தொடுத்தல் பிரிவு 146 ஆக மாற்றப்பட்டுள்ளது. |
அவதூறு வழக்கு பிரிவு 499 ஆக இருந்தது. | அவதூறு வழக்கு பிரிவு 384 ஆக மாற்றப்பட்டுள்ளது. |
கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பிரிவு 376 ஆக இருந்தது. | கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பிரிவு 63, 64, 70 ஆக மாற்றப்பட்டுள்ளது. |
தேசத்துரோக வழக்கு பிரிவு 124-A ஆக இருந்தது. | தேசத்துரோக வழக்கு பிரிவு 170 ஆக மாற்றப்பட்டது. |
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |