குண்டர் சட்டம் என்றால் என்ன? | Gundar Sattam Details in Tamil
ஐயோ குண்டர் சட்டமா? அப்போ அவ்ளோதான் பெயில் கிடைக்காது, ஜாமீன் கிடைக்காது, இனி பெயிலில் வரவே முடியாது என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த குண்டர் சட்டம் என்றால் என்ன?, யார் இவற்றில் வழக்கு போடலாம், யார் மீது வழக்கு போடலாம், இந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
குண்டர் சட்டம் – Preventive Detention Act in Tamil:
தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்பு சட்டத்தில் உள்ள ஒரு முக்கிய சட்டம் தான் குண்டடி தடுப்பு சட்டம். பொதுவாக குற்றம் செய்த ஒரு குற்றவாளியை அல்லது குற்றம் சாற்றப்பட்ட ஒரு நபரை கைது செய்வார்கள் இவற்றை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் குண்டர் சட்டம்படி ஒரு குற்றம் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றால் அந்த குற்ற செயலில் அவர் ஈடுபடுவதற்கு முன்பே அதனை தடுப்பதற்காக அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். அதாவது பேருக்கு ஏற்றபடியே வன்செயல்கள் நடக்காமல் தடுக்கும் இந்த சட்டம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்திய தண்டனை சட்டம் 121,122 மற்றும் 123-க்கான விளக்கம்..!
இதனை ஆங்கிலத்தில் Preventive Detention Act என்று அழைப்பார்கள். சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்கள் ஒரு வருடம் ஜாமீனில் வெளியேவே வரமுடியாதபடி சிறையில் அடைக்கப்படுவார்கள்.
1982-ஆம் ஆண்டு தமிழக அரசால் ஏற்றப்பட்ட இந்த சட்டத்தின் படி போதை பொருள் குற்றங்கள், பாலியல் தொழில் குற்றங்கள், திருட்டு சீடி, மணல் திருட்டு, கள்ளச்சாராயம் காச்சுவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை, தொடர்ந்து ஈடுபட வைப்புலவர்களை கைது செய்வார்கள்.
ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டால் அவர்கள் நிதிமாற்ற விசாரணை எதுவும் இன்றி அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
கைது செய்யப்பட்ட நபர் தனக்கு நியாயம் வழங்கக்கூறி ஒரு உயர்நீதி மன்ற நீதிபதி, ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரை கொண்ட நிர்வாக விசாரணை குழுவை அனுக்கிதான் முறையிட முடியும்.
மாநகர பகுதிகளில் காவல் துறை ஆணையரும், கிராமப்புறங்களில், மாவட்ட ஆட்சியரும் இந்த சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவராக இருக்காங்க. அனால் இந்த சட்டத்தின் மேல் சில விமர்ச்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருது.
குண்டர் சட்டத்தின்படி நியாயமற்ற முறையில் அரசு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி பலரையும் கைதுசெய்வதாகவும், நியாயமான காரணங்களுக்காக கைது செய்பவர்கள் மீதான வழக்குகள் சீக்கிரமாக தள்ளுபடி செய்வதாகவும் பலர் குற்றம் சாற்றுகின்றன.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
லஞ்சம் வாங்குபவர்களுக்கும் சட்டத்தில் தண்டனை உண்டு உங்களுக்கு தெரியுமா.?
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |