The Production Of Humanity Rights Act 1993
இன்றைய பதிவில் மனித உரிமை பாதுகாப்பு சட்டம் பற்றி பார்க்க போகிறோம். மனித உரிமை பாதுகாப்பு சட்டம் என்பது அரசியலமைப்பு சட்டத்தினால் உறுதி செய்யப்பட்ட அல்லது பன்னாட்டு நீதிமன்றத்தால் அமல்படுத்தக்கூடிய பன்னாட்டு உடன்படிக்கை உள்ளடக்கிய வாழ்வு, தன் உரிமை சமத்துவம் தனி நபர் மாண்பு ஆகியவற்றை குறிக்கும். 1993 ஆம் ஆண்டு வியன்னா மாநாடு 171 நாடுகள் கலந்துகொண்டு மனித உரிமையை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உரிமை ஆணையம் அமைக்கவும் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் 1993 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தலைவரால் அவசர சட்டம் இயற்றப்பட்டு, பாராளுமன்றத்தால் சட்டம் நிறைவேறி 1994 ல் நடைமுறைக்கு வந்தது.
மேலும், இந்த வகை சட்டம் தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையங்களை நிறுவுவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பதாகும். அந்த வகையில் இந்த பதிவில் மனித உரிமை பாதுகாப்பு சட்டம் பற்றி பார்க்கலாம் வாங்க.
மனித உரிமை சட்டத்தின் முக்கிய நோக்கம்:
இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமானது தேசிய மனித உரிமை ஆணையம் உருவாக்குதல், மாநில உரிமை ஆணையம் உருவாக்குதல், மாவட்ட அளவில் நீதி மன்றங்கள் உருவாக்குதல்,மனித உரிமையை சிறந்த முறையில் பாதுகாத்தல், மேலும் மனித உரிமை தொடர்புடைய விழிப்புணர்வுக்கு வழிவகை செய்தல் போன்றவை இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
மனித உரிமை சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- ஜனாதிபதியால் நியமிக்கபட்ட ஐந்து உறுப்பினர்களையும், உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தலைவரையும் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையத்தின் அரசியலமைப்பு.
- பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியியல் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தேசிய சிறுபாண்மை ஆணையத்தின் தலைவர்கள் சில செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்காக உறுப்பினராக அமல்படுத்தப்படுவார்கள்.
- மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த ஆணையம் விசாரணை நடத்தவும், வழக்குகள் தெடர்பான விரைவான விசாரணையை உறுதி செய்யவும் இந்த சட்டம் உதவுகிறது.
- இந்த சட்டம் 1993 ஆம் ஆண்டு அவசரகால சட்டமாக இயற்றப்பட்டு,1994 ஜனவரி 08 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
- குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் NHRC யின் தலைவராகவும் நியமிக்க தகுதியுடையவர்களாக மாற்றுதல்.
- தேசிய மனித உரிமை ஆணையத்தால் பெறப்பட்ட புகார்களை, சம்மந்தப்பட்ட மனித உரிமை ஆணையத்திற்கு மாற்றுவதற்கு உதவுதல்.
மனித உரிமை பாதுகாப்பு சட்டம் என்றால் என்ன ?
மனித உரிமை பாதுகாப்பு சட்டம் 1993 செப்டம்பர் 28 முதல் இந்த சட்டம் பின்னோக்கி அமலுக்கு வந்தது. இந்த சட்டம் முழு இந்தியாவிற்கும் பொருந்தும். ஆனால் , ஜம்மு காஷ்மீர் பொறுத்தவரை ஒன்றிய பட்டியல் மற்றும் பொது பட்டியல் தொடர்பான விஷயங்களுக்கு பொருந்தும். மனித உரிமை சட்டம் 199 இல் அரசியலமைப்பை வழங்குவதற்கு தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான மனித உரிமை நீதிமன்றம் ஆகும்.
| மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இதனை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்👉👉 | சட்டம் |














