தண்டனை சட்டம் 141, 142 மற்றும் 143-ல் சொல்லப்பட்டுள்ள குற்றங்கள் பற்றி தெரியுமா..?

section 141 and 142 in tamil

தண்டனை சட்டம் 141, 142 மற்றும் 143-ன் விளக்கம்

இந்தியர்களாகிய நாம் அனைவரும் சட்டம் பற்றி படித்து இருக்கிறோமோ இல்லையோ ஓரளாவது அந்த சட்டங்களை பற்றி தெரிந்து இருக்க வேண்டும். நாம் இதை பற்றி படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் கொஞ்சம் நேரம் இருக்கும் போது ஓரளவு தெரிந்துக்கொண்டால் போதும். அதனால் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளில் மூன்றினை மட்டும் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாங்க தண்டனை சட்டம் 141, 142 மற்றும் 143-ல் சொல்லப்பட்டுள்ள குற்றங்கள் என்ன என்பது பற்றி விரிவாக பதிவை படித்து பயன்பெறலாம்.

இதையும் படியுங்கள்⇒ நம்பிக்கை மோசடி செய்தால் சட்டத்தில் என்ன தண்டனை தெரியுமா..?

Section 141 IPC in Tamil:

அனைவருக்கும் பொதுவான ஒரு இடத்தில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டமாக சேர்ந்தார்கள் என்றால் அது நியாயம் அல்லது அநியாயம் இதில் எதுவாக இருந்தாலும் அது குற்றமாகும். அதுமட்டும் இல்லாமல் அப்படி கூடும் கூட்டத்தினால் பொது மக்களோ அல்லது போலீஸ் அதிகாரியோ தாக்கப்பட்டலோ அது IPC Section 141-ன் படி குற்றமாகும். 

அதேபோல 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டம் கூடும் போது அவர்கள் பொது அதிகாரி அலுவலகத்திற்கு சென்று அங்கு தகராறு செய்தால் அதுவும் தண்டனை சட்டம் 141-ன் கீழ் குற்றம் ஆகும். இத்தகைய குற்றத்தை செய்தால் போலீசாரால் தாக்க படுவார்கள்.

கூட்டம் கூடுதல் என்பது நியமாக இருந்தாலும் அதற்கான எல்லையை மீறி எதாவது ஒன்றினால் போலீசாரை தாக்கினாலோ அல்லது பொது இடத்தை சேதம் செய்தாலோ அதுவும் இச்சட்டத்தின் கீழ் குற்றம் என்று சொல்லப்படுகிறது.

வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் இந்த சட்டத்தை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்..!

Section 142 IPC in Tamil:

தண்டனை சட்டம் 141-ல் சொல்லப்பட்டுள்ளது போல பொது இடத்தில் கூட்டம் நடைபெறும் போது அங்கு அநியாயமாக தகராறு செய்கிறார்கள் என்றால் அது தவறு என்றும் தெரிந்தும் அந்த கூட்டத்தில் மற்றொரு கூட்டத்தில் உள்ள நபர்கள் கலந்து கொண்டார்கள் என்றாலோ அல்லது தகராறு செய்தாலோ அது தண்டனை சட்டம் 142-ன் படி குற்றமாகும். 

திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்.. எதற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?

Section 143 IPC in Tamil:

தண்டனை சட்டம் 141 மற்றும் 142-ல் சொல்லபட்டுள்ள குற்றங்களை செய்தால் அதற்கு Section 143 IPC-ன் கீழ் ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் அதற்கான தக்க அபராதமும் சேர்த்து குற்றவாளிக்கு அளிக்கப்படும். 

இதையும் படியுங்கள்⇒ இந்திய தண்டனை சட்டம் பிரிவு 116 பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com