அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் இரண்டு வேலை செய்தால் குற்றமா..!

Advertisement

தண்டனை சட்டம் 168 மற்றும் 169-ன் விளக்கம் 

நாம் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளில் இடம் பெற்றுள்ள சட்டங்களை பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ளவில்லை என்றாலும் ஏதோ ஒரு வகையில் ஒரு சில சட்டங்களை பற்றி மட்டும் அறிந்து இருப்போம். அந்த வகையில் இன்றைய பதிவில் தண்டனை சட்ட பிரிவு 168 மற்றும் 169-ல் பொது பணியாளர் பதிவில் இருக்கும் ஒரு அதிகாரிகள் எந்த மாதிரியான தவறுகள் புரிந்தால் குற்றம் மற்றும் அந்த குற்றத்திற்கான தக்க தண்டனை என்ன என்பது பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ சட்ட விரோதமான கூட்டம் கூட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்..!

IPC Section 168 in Tamil:

அரசு பொதுப்பணியில் பணிபுரியும் ஒரு நபர் இந்த வேலை இல்லாமல் மற்றொரு தொழிலை செய்வதோ அல்லது மற்றொரு இடத்தில் வேலை செய்வதோ வேறு ஒரு  நபருக்கு தெரியவந்து அவர் போலீஸ் அதிகாரியிடம் புகார் அளித்து விசாரணையில் அது உண்மை என்று தெரியவந்தால் IPC Section 168-ன் படி குற்றமாகும்.

இந்த குற்றத்தை புரிந்த அரசு பணியாளருக்கு 1 வருடம் சிறைத்தண்டனை அல்லது அதற்கான தக்க அபராதம் அளிக்கப்படும். சில நேரத்தில் இரண்டும் சேர்ந்து தண்டனையாக குற்றவாளிக்கு அளிக்கப்படும்.

Section 169 IPC in Tamil:

தண்டனை சட்டம் 169- ல் அரசு பொதுப்பணியில் பணியாற்றும் ஒரு நபர் அவருடைய பெயரிலோ அல்லது வேறு ஒருவர் பெயரிலோ சொத்துக்களை வாங்கினாலோ அல்லது ஏலம் விடப்படும் பொருட்களை வாங்கினாலோ அதற்கு முறையான ஆவணங்கள் இல்லை என்றால் அது குற்றம் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஏலம் விடப்படும் பொருட்களை தனக்கு ஏற்றவாறு அதனுடைய தொகையினை ஏற்றம் இறக்கமாக அமைத்து கொண்டு அந்த ஏலத்தை அவருடைய பெயரிலையோ அல்லது மற்றொருவர் பெயரிலையோ வாங்கினால் அதுவும் Section 169 IPC- கீழ் குற்றமாகும்.

மேலே சொல்லப்பட்டுள்ள குற்றங்களுக்கு 2 வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய எதவாது ஒரு சிறைத்தண்டனை மற்றும் அதற்கான அபராதம் விதிக்கப்படும். அதுமட்டும் இல்லாமல் கணக்கில் இல்லாத அந்த சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்.

இதையும் படியுங்கள்⇒ நம்பிக்கை மோசடி செய்தால் சட்டத்தில் என்ன தண்டனை தெரியுமா..?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 
Advertisement