இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 334 மற்றும் 336-க்கான விளக்கம்..!

Advertisement

Section 334 and 336 IPC in Tamil

இன்றைய காலகட்டத்தில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால் நாம் அனைவருமே நமது இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள அனைத்து பிரிவுகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். அதனால் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சட்ட பிரிவு பற்றிய விளக்கம் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 334 மற்றும் 336-க்கான விளக்கம் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இவ்விரண்டு சட்ட பிரிவுகளும் எந்தெந்த குற்றங்களுக்கு தண்டனையை அளிக்கிறது என்று அறிந்துக் கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> சட்ட விரோதமான கூட்டம் கூட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்

Section 334 IPC Explained in Tamil: 

 ஒருவர் மற்றவரை ஆத்திரமூட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு நம்மை ஆத்திரமூட்டுகிறார் என்று தெரிந்த பிறகும் தாமாகவே முன்வந்து ஆத்திரமூட்டுபவரை காயப்படுத்துபவருக்கு ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை அல்லது 500 ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும்.  

அதிலும் குறிப்பாக நம்மை ஆத்திரமூட்டிய நபரை தவிர்த்து மற்ற நபர்களை காயப்படுத்த வேண்டும் என்று நினைக்காமலோ அல்லது அறியாமலோ காயத்தை ஏற்படுத்தி இருந்தாலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை அல்லது ஐநூறு ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> போலி ஆவணம் தயாரித்தால் இந்த தண்டனை தான் கிடைக்கும்

IPC Section 336 in Tamil:

மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அவசரமாகவோ அல்லது அலட்சியமாகவோ எந்தச் ஒரு செயலைச் செய்தாலும், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனையுடன் 250 ரூபாய் வரை  அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 

 

Advertisement