வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மரங்களை வெட்டினால் இந்த தண்டனை தான்..! | Tree Protection Laws in Tamil

Updated On: March 28, 2025 6:30 PM
Follow Us:
tree protection legislation in tamil
---Advertisement---
Advertisement

மரங்கள் பாதுகாப்பு சட்டம் | Tree Protection Laws in Tamil 

மரங்கள் தான் நாம் சுவாசிக்கும் காற்றுகளை அளிக்கிறது. அதனை சுவாசித்து தான் நம்மை நாமே பாதுகாத்து வருகிறோம். மரங்கள் இல்லையென்றால் நாம் சுவாசிக்க காற்று இல்லாமல் போய்விடும். ஆகவே நம்மை போல் தான் மரங்களுக்கும் உயிர்கள் உள்ளது. அதனை வீட்டில் வளர்த்தாலும் அதிகளவு அதனை அளிக்க நினைப்பது தவறு. மேலும் அதனை வளர்க்க மட்டுமே நினைக்க வேண்டும் அதனை வெட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இன்றைய பதிவில் மரங்களை வெட்டினால் என்ன தண்டனை என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க..!

மரத்தை வெட்டினால் என்ன தண்டனை:

சிலர் வீட்டில் இருக்கும் மரங்களை விட காடுகளில் உள்ள மரங்களை மட்டுமே அதிகமாக வெட்டுவார்கள். அந்த மரங்கள் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்திலும் மற்றும் அதனை விற்றால் நல்ல பணம் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் வனபகுதியில் இருக்கும் மரங்களை வெட்டி விற்க முயற்சிப்பார்கள். அப்படி செய்வது சட்ட படி குற்றம்.

இதற்கு நிறைய சட்டங்கள் உள்ளது. அதிலும் அரசாங்கத்திற்கு சொந்தமான மரங்களை வெட்டினால் அதற்கு நீங்கள் முதலில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்.. எதற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?

 இந்திய வனச்சட்டம்  1927 -படி யாரேனும் ஒருவர் வனத்துறையில் அனுமதியின்றி மரத்தை வெட்டினால் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவருக்கு 10,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும்.  

அபராதம் மரத்தில் வயதை பொறுத்தும் மற்றும் மரத்தின் மதிப்பை பொருத்தும் மாறுபடும்.

ஒருவர் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்களை வெட்ட விருப்பினால் அதற்கு முறையான அனுமதி அளிக்கப்பட்டால் மட்டுமே மரங்களை வெட்டமுடியும்.

முதலில் மரங்களால் அவர்களுக்கு என்ன அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்பதை விண்ணப்பமாக எழுதியும் அதனை புகைப்படமாக எடுத்து வனத்துறை அலுவலகத்தில் அளிக்கவேண்டும். அவர்கள் அதை பரிசோதித்து அதன் பின் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று சரியாக ஆராய்ந்து அதன் பின் அவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே நீங்கள் மரங்களை வெட்ட முடியும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் இந்த சட்டத்தை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்..!

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  law 
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now