வீட்டு வாடகை சட்டம் | Veetu Vadagai Sattam in Tamil
சொந்த வீட்டின் கனவுகளை நிறைவேற்ற முக்கிய பங்கு வாடகை வீட்டுக்குள் உள்ளது. ஏனென்றால் நாம் இந்த வீட்டில் இருந்து கொண்டு தான் சொந்த வீட்டை கட்ட முடியும். வாடகை வீடு நிறைய இடங்களில் நமக்கு நிறைய உதவிகளையும் செய்கிறது. ஒரு ஊரில் வேலை பார்க்கிறோம் என்றால் அந்த இடத்தில் ஒரு வீடு இருக்கும் அதே வேலையை மாற்றி வேறு ஊருக்கு செல்கிறோம் என்றால் அங்கு சென்று புதிய வீடு வாங்க முடியாது ஆனாலும் அங்கும் நமக்கு உதவியை செய்கிறது இந்த வாடகை வீடு ஆகும்.
அதிகளவு மக்கள் வாடகை வீட்டில் தான் இருந்து வருகிறார்கள். அப்படி இருந்து வரும்பட்சத்தில் சில தகறாரு வரும் அல்லது வீட்டை காலி செய்யவேண்டும். அல்லது வீட்டில் உள்ளவர்களுடன் சண்டை என்றால் உடனே காலி செய்ய சொல்வார்கள் அப்படி செய்வது தவறா அல்லது சரியா என்று நிறைய பேர்க்கு கேள்வியாக இருக்கும். அதனையும் தெரிந்துகொண்டு அதேபோல் வாடகை சட்டத்தை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்..!
Veetu Vadagai Sattam in Tamil:
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் அந்த வீட்டின் சொந்தக்காரர் உங்கள் வீட்டிற்குள் ஏதோ ஒரு காரணத்திற்காக வரவேண்டுமென்றால் வீட்டிற்குள் வருவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக நோட்டிஸ் கொடுக்கவேண்டும். மேலும் காலை 7 மணி முதல் இரவு 8 மணிக்குள் மட்டுமே செல்லவேண்டும்.
வாடகை கொடுக்கிறோம் என்றால் அதற்கு வீட்டின் சொந்தக்காரர் ரசீது கொடுக்கவேண்டும். முக்கியமாக வாடகை பணத்தை ஆன்லைன் வழியாகவோ அல்லது மணியார்டர் மூலமாவோ கொடுக்கலாம். 2 மாதம் வாடகையை சேர்த்தும் கொடுக்கலாம்.
வாடகை ஒப்பந்தம் போட்டு முடியப்போகும் 3 மாதத்திற்கு முன்பே இரண்டு தரப்பினரும் அமர்ந்து புதிதாக ஒரு ஒப்பந்தம் போட்டுகொள்ள வேண்டும்.
ஒப்பந்தம் முடித்தும் புதிதாக ஒப்பந்தம் போடவில்லை என்றால் தொடர்ந்து 6 மாதம் வீட்டில் வசிக்கலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள்👉👉 திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்.. எதற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா?
அதன் பின் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொன்னால் காலி செய்ய வேண்டும்.
வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டவர் இறந்து விட்டால் அந்த ஒப்பந்தத்தில் உள்ள உறவினர்கள் தொடர்ந்து ஒப்பந்தம் செய்த நாட்கள் வசிக்கலாம்.
ஒப்பந்தம் முடிந்த பிறகு காலி பண்ண சொல்லும் போது காலி செய்யாமல் இருந்தால் உரிமையாளர் நிதி மன்றத்திற்கு சென்று புகார் செய்யலாம்.
நீதி மன்றம் சொல்லியும் குடியிப்பவர்கள் வீட்டை காலி செய்யவில்லையென்றால் வீட்டை காலி செய்யும் தேதியிலிருந்து இரண்டு மடங்கு வாடகை வீட்டின் உரிமையாளர் வசூல் செய்துகொள்ளலாம்.
இந்த உரிமைகள் உரிமையாளர், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு கிடைக்கவேண்டுமென்றால் முறையாக வாடகை ஒப்பந்தம் போட்டு ரிஜிஸ்டர் (register) செய்திருந்தால் மட்டுமே அனைத்து உரிமையும் கிடைக்கும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 வீட்டு பத்திரத்தை வைத்து கடன் வாங்குவதற்கு முன் நீங்கள் இதை தெரிந்துகொள்ளுங்கள்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |