இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை என்றால் என்ன.? | Double Life Imprisonment Meaning in tamil

Advertisement

இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை என்றால் என்ன | Double Life Imprisonment How Many Years | Irattai Aul Thandanai Meaning in Tamil

பொதுவாக நம் நாட்டில் செய்யும் குற்றங்களுக்கு சட்டமானது நிறைய தண்டனைகளை வழங்கி வருகிறது. நாம் சிலரை சாதாரணமாக திட்டினால் கூட அவர்கள் நம் மீது புகார்கள் கொடுத்தால் அதற்கும் தண்டனை கிடைக்கும். அதற்கு சட்டத்தில் இடம் உண்டு. நம்முடைய பேச்சில் சொல்ல வேண்டுமென்றால் சட்டத்தில்  ஓட்டை இருக்கிறது என்று சொல்லலாம்.

சரி நாம் அதிகமாக செய்திகளில் கேட்பது தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை வழங்கபட்டது என்ற செய்தியை தான். அதேபோல் கடுங்காவல் தண்டனை என  நிறைய தண்டனைகள் உள்ளது. இந்த தண்டனைகள் பற்றி நமக்கு தெரியும். ஆனால் இந்த இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை என்றால் என்ன..? அதற்கு எவ்வளவு நாட்கள் சிறையில் இருக்க வேண்டும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா..? வாங்க அதனை பற்றி பார்க்கலாம்.

இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை என்றால் என்ன..? | இரட்டை ஆயுள் தண்டனை எத்தனை வருடம்.?

ஆயுள் தண்டனை என்பது குற்றம் செய்பவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருந்து அவர்களின் வாழ்நாட்களை கழிக்கவேண்டும் என்பது தான் தண்டனை ஆகும். ஆனால் இந்த இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை என்பது என்ன என்றால்,  இந்திய தண்டனை சட்டம் பிரிவு 31 ஒருவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குற்றங்களுக்காக ஒரு விசாரணையில் தண்டிக்கப்பட்டால் அவர்களுக்கு பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்படலாம். அதேபோல் அது ஒரே நேரத்தில் விதிக்கப்படலாம் அல்லது தொடர்ச்சியாகவும் வழங்கப்படலாம். அது அவர்களின் வாழ்நாள் வரை தொடரும்.

இரட்டை ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் தண்டனைக்கு மேல் விதிக்கப்படும்.  அது தான் இரட்டை ஆயுள் தண்டனை ஆகும்.

இந்த சட்டங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement