வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அம்மாவின் சொத்தில் அதிக பங்கு யாருக்கு

Updated On: May 31, 2023 5:38 AM
Follow Us:
women's property rights in tamil
---Advertisement---
Advertisement

யாருக்கு அம்மாவின் சொத்தில் அதிக உரிமை இருக்கிறது – women’s property rights in tamil

women’s property rights in tamil – நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் அம்மாவின் சொத்தில் யாருக்கு அதிக உரிமை மற்றும் பங்கு உள்ளது என்பது குறித்த தகவலை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அம்மாவின் சொத்தில் மகனுக்கு அதிக பங்கு இருக்கிறதா அல்லது மக்களுக்கு அதிக பங்கு இருக்கிறதா. இறந்து போன அந்த மனைவியின் கணவருக்கு சொத்தில் உரிமை உள்ளதா அல்லது இல்லையா. அந்த குழந்தையினுடைய அப்பாவிற்கு சொத்தில் பங்கு இருக்கிறதா இல்லையா என்பது குறித்த தகவலை பற்றி தான் இப்பொழுது நாம் இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ள போகிறோம்.

அம்மாவின் சொத்தில் அதிக பங்கு யாருக்கு

நம்மளுடைய இந்து கூட்டுக்குடும்ப வழக்கில் பெண்களுக்குரிய சொத்தானது அனைத்தும் மக்களுக்கே உரிமையான சொத்து அதில் மகன்களுக்கு பங்கு கிடையாது என்று எழுதப்படாத ஒரு நடைமுறை இருந்து வருகிறது.

அம்மா பெயரில் இருக்கும் அசையும் சொத்தாக இருந்தாலும் சரி அசையா சொத்தாக இருந்தாலும் சரி அந்த சொத்தானது முழுவதும் நேரடியாக அந்த பெண் வாரிசுகளுக்கு மட்டுமே போகும், அவர்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று ஒரு நடைமுறை இன்று வருகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சொத்து வாங்கும் போதும் சரி, விற்கும் போது சரி வருமான வரி துறை விதிகளை மீறிடாதீங்க..

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அம்மாவிற்கு சொந்தமான நகைகள் அனைத்தும் அந்த பெண்கள் வாரிசுகளே எடுத்துக்கொள்வார்கள்.

மேலும் அம்மா பெயரில் இருக்கும் அந்த சொத்துக்களையும் அந்த பெண் பிள்ளைகளே அனைத்தையும் எடுத்து தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வார்கள்.

இந்து வாரிசுரிமை சட்டம் இதற்கு என்ன சொல்கிறது என்றால் அவ்வாறு இறந்து போன ஒரு இந்து பெண்ணிற்கு சொத்து இருக்கிறது அந்த சொத்து அவர் எவ்வாறு பெற்றார் என்றால் சுயமாக சம்பாரித்து பெற்றிருந்தாலும் சரி அல்லது தன்னது கணவர் மூலம் பெற்றிருந்தாலும் சரி அல்லது தன்னுடைய தாய் தந்தை மூலம் பெற்றிருந்தாலும் சரி அல்லது வேறு ஏதேனும் உயில் மற்றும் செட்டில்மண்ட் ஆவணங்கள் மூலம் ஒரு சொத்தை அனுபவத்தில் தன்னுடைய பெயரில் வைத்திருந்தாலும் சரி, அல்லது நீதிமன்றம் மூலம் ஒரு சொத்தை தன்னுடைய அனுபவத்தில் வைத்திருந்தாலும் சரி அந்த சொத்தும் அனைத்துமே அந்த இந்து பெண்ணிற்கு முழுமையான சொத்து (absolute property) என்பார்கள்.

அவருடைய முழு உரிமைக்கான அந்தசொத்தின் மீது அவர் எந்தவிதமான உயில் மற்றும் செட்டில்மண்ட் ஆவணம் எழுதி வைக்காத பொழுது அந்த சொத்தானது இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 15-யின் கீழ் அவருடைய வாரிசுகளுக்கு சமமாக பிரித்தளிக்கப்டும்.

இந்து வாரிசு உரிமை சட்டம் பிரிவு 15 ஒரு பெண்ணிற்கு யாரெல்லாம் வாரிசுகள் என்று தெளிவாக கூறியுள்ளது. ஒரு பெண்ணிற்கு வாரிசுகள் என்று பார்த்தால் அந்த பெண்ணினுடைய மகள், மகன் மற்றும் அந்த மகன் இறந்து அந்த மகனுக்கு வாரிசுகள் இருந்தால் அந்த பேரன் பேத்திக்கு. அந்த மகள் இறந்து அந்த மகளுக்கு வாரிசுகள் இருந்தால் அந்த பேரன் பேத்திக்கு. அந்த இறந்து போன பெண்ணின் கணவருக்கு என்று அனைவருக்கும் சமமாக சொத்து பிரித்தளிக்கப்டும்.

அந்த சொத்தில் பெண்ணிற்கு மட்டுமே அதிக உரிமை மற்றும் பங்கு உள்ளது என்பது கிடையாது. இந்து வாரிசு உரிமை சட்டம்படி அந்த இறந்து போன பெண்ணினுடைய வாரிசுகளான மகன், மகள் மற்றும் கணவர் முதல் வகுப்பு வாரிசுகளாக கருதப்படும் பேரன் பேதி வழங்கப்படும். முதல் வகுப்பு வாரிசுகள் இல்லை என்றால், அந்த சொத்திற்கு கணவருடைய வாரிசுகள் வாரிசுகளாக வருவார்கள், கணவருடைய வரிகளும் இல்லாதபட்சத்தில் இறந்து போன அந்த பெண்ணின் தாய் தந்தை வாரிசுகளாக வருவார்கள்

இறந்து போன அந்த பெண்ணிற்கு தந்தை தாய் இல்லாத பட்சத்தில் இறந்து போன அந்த பெண்ணின் தந்தையின் வாரிசுகள் வாரிசாக வருவார்கள், தந்தையின் வாரிசு இல்லாத பட்சத்தில் தாயின் வாரிசுகள் வாரிசாக வருவார்கள். இவ்வாறு தான் ஒரு இறந்து போன் இந்து பெண்ணின் சொத்து உரிமையாளருக்கு வழங்கபடுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்களை இழிவுபடுத்தி பேசினாலோ, சத்தம் போட்டால் இந்த தண்டனை தான்..!

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now