அணிமணி கெச்சம் என்றால் என்ன.?

Advertisement

அணிமணி கெச்சம் பொருள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அணிமணி கெச்சம் என்றால் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் என்னதான் தமிழ் மொழி பேசினாலும், தமிழிலுள்ள பல்வேறு சொற்களுக்கான அர்த்தம் பற்றி நமக்கு தெரிவதில்லை. அக்காலத்தில் உள்ளவர்கள் தூய தமிழில் பேசி வாழ்ந்துள்ளார்கள். ஆனால் தற்போது அவர்களின் மொழிகளில் நமக்கு சில வார்த்தைகளுக்கான அர்த்தம் என்ன என்பதே தெரியாது.

அவற்றில் ஒன்று தான் அணிமணி கெச்சம். அணிமணி கெச்சம் என்று நாம் பிறர் கூற கேட்டு இருப்போம். ஆனால், அணிமணி கெச்சம் என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். ஓகே வாருங்கள், அணிமணி கெச்சம் என்பதன் பொருள் என்ன என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம்.

அணிமணி பொருள்:

அணிமணி என்பது, மணிகள் பதிக்கப்பட்ட அணிகலன்கள் ஆகும். முற்காலத்தில் ஆபரணங்கள்/நகைகள் யாவும் அணிமணிகளாகவே இருந்தன. புதுத்துணியையும் அணிமணிகளையும் வாங்கியாயிற்றா என்ற பொருளில் இருந்து வந்ததே துணிமணி ஆகும். இவற்றில் துணி என்பது புதுத்துணியையும், மணி என்பது அணிமணி (ஆபரணங்கள்) ஆகும். எனவே, அணிமணி என்பது, மணிகள் பதிக்கப்பட்ட அணிகலன்கள் ஆகும்.

அணிமணி கெச்சம் பொருள்

பெண்கள் கட்டாயம் இந்த 5 அணிகலன்ளை அணிய வேண்டும் ஏன் தெரியுமா..?

கெச்சம் பொருள்:

கெச்சம் என்பது தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கியமான அணிகலன் ஆகும். இது பொதுவாக பெண்களின் கால்களில் அணியப்படும் சிறிய நகையாகும். கெச்சம் என்பதை சிறு சதங்கை மற்றும் காலணி வகை என்று கூறுவார்கள். சலங்கை, கொலுசு, காப்பு போன்றவற்றை கெச்சம் என்று குறிப்பிடலாம்.

கெச்சம் பொதுவாக, வட்டமாக அல்லது முக்கோணமாக இருக்கும். இது பெரும்பாலும் பொன், வெள்ளி மற்றும் பிற  செல்வாக்கு கொண்ட பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.

கெச்சம் பொதுவாக இரண்டு வகைப்படும். ஒன்று பொற்கெச்சம், மற்றொன்று வெள்ளிக்கெச்சம் ஆகும். பெண்கள் தங்கள் அழகை மேம்படுத்துவதற்காக கெச்சதை அணிகிறார்கள்.

அணிமணி கெச்சம் பொருள்

அணிமணிக்கெச்சம் பொருள்:

அணிமணிக்கெச்சம் என்பது, மணிகளால் செய்யப்பட்ட காலில் அணியக்கூடிய சலங்கை, கொலுசு வகைகள் போன்றது. இதனை தான் அணிமணிக்கெச்சம் என்று கூறுகிறார்கள். பண்டைய தமிழர்கள் ஆண் மற்றும் பெண் என இருவரும் தங்களை அழகுப்படுத்தி கொள்ள பல்வேறு ஆபரணங்களை அணிந்து வந்தார்கள்.அவற்றில் ஒன்று தான் அணிமணிக்கெச்சம். காலில் அணியப்படும் அணிகலன் ஆகும்.

செம்பு அணிகலன்கள் அணியும் போது ஏன் உடலில் பச்சை நிறம் தோன்றுகிறது தெரியுமா..?

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement