அண்ணி வேறு சொல் | Anni Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அண்ணி என்ற சொல்லிற்கான வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். உறவுமுறை பெயர்களில் அண்ணி என்ற உறவும் ஒன்று. அண்ணி என்றால் அண்ணனின் மனைவி என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அண்ணி என்ற வார்த்தைக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
உறவுமுறை பெயரில் உள்ள ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தமும், அதனை குறிக்கும் வேறு சொற்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக அப்பா என்பதை தகப்பன், அப்பன், அய்யா, தந்தை என்று கூறுவார்கள். இதுபோன்று ஒவ்வொரு உறவிற்கு பல்வேறு பெயர்கள் இருக்கும். ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில், இப்பதிவின் வாயிலாக அண்ணி என்பதற்கான வேறு சொற்கள் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
அண்ணி பொருள் என்ன.?
அண்ணி என்பது ஒரு உறவுமுறை பெயர் ஆகும். அண்ணனின் மனைவியை அண்ணி என்று கூறுவார்கள். அண்ணி என்பதற்கு பல்வேறு பெயர்கள் உள்ளது. அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
அண்ணி என்பதன் வேறு சொல்:
- மதினி
- மதனி
- ஆயந்தி
- அத்தாச்சி
- மைத்துனி
மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் அண்ணி என்பதற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் ஆகும். எனவே, அண்ணி என்ற வார்த்தைக்கு பதிலாக மதினி, மதனி, ஆயந்தி, அத்தாச்சி மற்றும் மைத்துனி என்ற வார்த்தைகளை பயன்படுத்தியும் அண்ணியை கூப்பிடலாம்.
அண்ணி in English:
அண்ணி என்பதை ஆங்கிலத்தில் Sister in Law, Brother’s Wife என்று கூறுவார்கள்.
அண்ணி கவிதை:
என் அண்ணி ..
என் தாயின் மருமகளாய்
என் தாய்க்கு மறுமுகமாய்
அண்ணனுக்கு மனைவியானாய்
அப்பாவிற்கு மகளானாய்
இருள் சூழ்ந்த இல்லத்தின்
இன்ப ஒளியாய் வந்தவள் நீ
உன்னை அண்ணி என்றாலோ
அன்னியமாவாய்
அதனாலோ அன்னை என்றே அழைத்தேன்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |