அதிகம் வேறு சொல்

Advertisement

மிகுதி வேறு சொல் | அளவுக்கு அதிகம் வேறு சொல்

நாம் அனைவருமே தமிழ் மொழியில் பேசுகின்றோம், எழுதுகின்றோம்.   ஆனால் இதில் உள்ள வார்த்தைகளுக்கான அர்த்தம் வேறு வார்த்தைகள் தெரியுமா என்று கேட்டால் நிச்சயம் தெரியாது. நம்முடைய ஊரில் புளிக்குழம்பு என்று கூறுவோம், ஆனால் இதனை சென்னையில் கேட்டால் காரக்குழம்பு என்று கூறுவார்கள். இது போல ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு விதமாக கூறுவார்கள்.

நம்முடைய தமிழ் மொழியே ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு விதமாக பேசுவார்கள். கோயம்புத்தூர் பாஷை, மதுரை பாஷை, சென்னை மொழி போன்றவை கேட்டிருப்பீர்கள். அது போல ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பல சொற்களால் அழைக்கலாம். இந்த பதிவில் அதிகம் என்று வார்த்தையை எப்படி அழைக்கலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

அதிகம் என்றால் என்ன:

அதிகம் என்ற வார்த்தையானது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது. ஒரு பொருள் அதிகமாக இருக்கிறது என்றால் இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றோம்.

அதேபோன்று மீதியினை சுட்டக் கூடியதாகவும் அதிகம் என்ற பதம் காணப்படுகின்றது. மேலும் நிறைவு பெற்று காணப்படுபவற்றினையும் சுட்டக் கூடியதாகவும் அதிகம் என்னும் சொல் இடம்பெற்று வருகின்றது.

எடுத்துக்காட்டு:

  • அதவாது கூடையில் காய்கறி எடுக்க சொல்கிறார்கள் என்று வைத்து கொள்வோம், இதில் கூடையில் அதிக காய்கறிகள் இருக்கிறது என்று கூறுவோம்.
  • ஆற்றில் தண்ணீர் அதிகமாக போகிறது பார்த்து குளித்திட்டு வா என்று கூறுவார்கள்.
  • ஒருவர் அதிகப்படியாக பேசுகிறார், அதாவது வாய் அதிகமாக இருக்கும் போல என்று கூறுவார்கள்.
  • தண்ணீர் நிரம்பி வழிகிறது.
  • ஆறு நிறைய தண்ணீர் போகிறது.
  • ராம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளான்.

அதிகம் வேறு சொல்:

அதிகம் என்ற வார்த்தையை பல சொற்களை அழைக்கலாம், அவை என்னென்ன வார்த்தைகள் என்று கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.

  • எச்சம்
  • நிறைவு
  • மிகுந்த
  • மிகுதி
  • கூடுதல் ‘
  • ஏற்றம்
  • உயர்வு
  • மிகை
  • ரொம்ப
  • நிரம்ப

அதிகம் in english:

அதிகம் என்ற வார்த்தையை தமிழ் எப்படியெல்லாம் கூறலாம் இன்று அறிந்து கொண்டீர்கள், ஆனால் அதனை ஆங்கிலத்தில் எப்படி கூறலாம் என்று தெரிந்து கொள்ள கீழே பார்த்து அறிந்து கொள்ள வேண்டும்.

  • Much
  • Excess
  • Surplus
  • A lot
  • More

அதிகம் எதிர்ச்சொல்:

அதிகம் என்ற வார்த்தைக்கு எதிர்சொல் குறைவு

தொடர்புடைய பதிவுகள் 
வடிவம் வேறு சொல்
பாதுகாப்பு வேறு சொல்
லஞ்சம் என்பதை இப்படியெல்லாம் கூட சொல்லலாமா..!
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

Advertisement