அதிகாலை என்பதன் வேறு சொல் என்ன..?

Advertisement

அதிகாலை வேறு சொல்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அதிகாலை வேறு சொல் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. பொதுவாக, தமிழில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வேறு சொல்லும் அர்த்தமும் என்பது இருக்கும். ஆனால், அதனை அனைத்தையும் நாம் ஒரே நேரத்தில் கற்றுக்கொள்ள முடியாது. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் பல்வேறு சொற்களுக்கான/பெயர்களுக்கான வேறு சொற்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றைய பதிவில் அதிகாலை என்பதற்கான வேறு சொல் பற்றி விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நாம் அனைவருமே அதிகாலை என்ற சொல்ல பயன்படுத்தி இருப்போம். அல்லது பிறர்கூற கேட்டு இருப்போம். அதிகாலை என்பது பகல் பொழுது ஆரம்பமாகும் காலம் ஆகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதிகாலை என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

அதிகாலை என்றால் என்ன.? | அதிகாலை பொருள் என்ன.?

அதிகாலை வேறு சொல்

அதிகாலை என்பது காலை 03:00 AM மணி முதல் காலை 06:00 AM மணிக்குள்ளாக உள்ள காலம் என்பதாகும். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், சூரியன் காலையில் கிழக்குத் திசையில் உதிப்பதற்கும், அதற்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்னர் உள்ள நேரத்திற்கும் இடைப்பட்ட காலப்பொழுதாகும்.

இந்நேரத்தில் சேவல் ஆனது சரியான நேரத்தில் கூவும். இவ்வேளையில் சூரியன் அடிவானத்தின் கீழ் இருக்கும். அதுமட்டுல்லாமல், இக்காலம் முன் சூரியோதய சந்தியொளி அல்லது சூரியோதய காலம் எனவும் அழைக்கப்படுகிறது.

அதிகாலை என்பதன் வேறு சொல்:

  • வைகறை 
  • விடியற்காலை
  • வைகுறு விடியல்
  • விடியல் 

மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அதிகாலை என்பதற்கான வேறு சொற்கள் ஆகும்.

அதிகாலை நேரம் எது.?

காலை 3 மணி முதல் 6 மணி வரையிலான காலம் அதிகாலை நேரம் ஆகும். இதனை தான் பிரம்ம முகூர்த்தம் என்று கூறுவார்கள்.

அதிகாலை Word in English:

அதிகாலை என்பதை Dawn என்றும், Early Morning என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

தொடர்புடைய பதிவுகள் 
சேவல் ஏன் அதிகாலையில் கூவுகிறது?
பெண்கள் அதிகாலை எழுந்தவுடன் கடைபிடிக்க வேண்டியவை..!
வீரன் வேறு சொல்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement