அபாயம் வேறு சொல்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அபாயம் என்ற சொல்லிற்கு வழங்கப்படும் வேறு சொற்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக, ஒவ்வொரு சொல்லுக்கும் அச்சொல்லினை குறிக்கும் வேறு சொற்கள் என்பது இருக்கும். ஆனால், அவை அனைத்தும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பிலை. இதுபோன்ற வேறு சொற்கள் பற்றி நாம் அனைவரும் தெரிந்துகொள்வது அவசியம். ஏனென்றால், தேர்வுகளில் பல்வேறு வகையில் வேறு சொற்கள் கேள்விகள் கேட்கப்படும்.
ஆகையால், தமிழ் சொற்களில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் வழங்கப்படும் வேறு சொற்கள் பற்றி நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். அப்படி நீங்கள் வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் பொதுநலம் வலைத்தளத்தை பார்வையிடவும். நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றைய பதிவில் அபாயம் என்ற சொல்லிற்கு வழங்கப்படும் வேறு சொற்கள் பற்றி கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
அபாயம் என்றால் என்ன.?
அபாயம் என்பது எந்தவொரு ஆபத்திற்கான முன்னறிவிப்பு அல்லது அச்சத்தைக் குறிக்கிறது.ஆபத்து அல்லது தீங்கு ஏற்படும் சூழ்நிலையை குறிக்கும் சொல் ஆகும். இது பெரும்பாலும் அல்லல், இன்னல், கேடு, மற்றும் துன்பம் போன்றவற்றை உருவாக்கும் சூழலை விவரிக்கிறது. பாதுகாப்பற்ற இடங்களை வெளிப்படுத்துவதற்காகவும், அதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் அபாயம் என்ற சொல் பயன்படுகின்றது.
அபாயம் வேறு பெயர்கள்:
- இடர்
- ஆபத்து
- இடையூறு
- ஏதம்
- துன்பம்
- கேடு
- இன்னல்
மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் அபாயம் என்ற சொல்லிற்கு வழங்கப்படும் வேறு சொற்கள் ஆகும்.
அபாயம் இணையான தமிழ் சொல்:
அபாயம் இணையான தமிழ் சொல் இடர் என்பதாகும்.
அபாயம் Meaning in English:
அபாயம் என்பதை ஆங்கிலத்தில் Peril, Danger என்று கூறுவார்கள்.
அபாயம் எடுத்துக்காட்டு வாக்கியம்:
- இந்த இடத்தில் அபாய பலகை உள்ளது. எனவே, இந்த பகுதிக்கு நாம் செல்வதை தவிர்க்க வேண்டும்.
- அபாயம் வரும்போது நாம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
- அபாய பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
- தீவிர மழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும் அபாயத்தைத் தவிர்க்க வீட்டில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
- கவனக்குறைவாக செயல்பட்டால் அபாயம் ஏற்படும்.
இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |