வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அம்பு என்பதனை எப்படியெல்லாம் சொல்லலாம்..

Updated On: June 13, 2025 5:49 PM
Follow Us:
ambu veru sol
---Advertisement---
Advertisement

அம்பு வேறு பெயர்கள் | வில் அம்பு வேறு பெயர்கள்

நம்முடைய தாய் மொழியான தமிழ் மொழியில் பேசுகின்றோம், சரளமாக எழுதுகின்றோம் நமக்கு எல்லாமே தெரிகிறது என்று நினைப்பது தவறு. ஏனென்றால் நம்மில் பலருக்கு ஒரு சொல் பல பெயர்களை பற்றி அறிந்திருப்பதில்லை. மனிதர்களுக்கு வைக்கும் பெயர்களிலே பல பெயர்கள் இருக்கின்றது.

வீட்டில் ஒரு பெயரும், சான்றிதழில் ஒரு பெயரும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் நண்பர்கள் வேறொரு பெயர்களை வைப்பார்கள். இப்படி பல பெயர்களில் அழைப்பதுண்டு. அந்த வகையில் பெயர்களுக்கு மட்டுமில்லை நம்முடைய தமிழ் வார்த்தைகளில் பல சொற்களால் அழைக்கலாம். அதனை பற்றி கொள்வது அவசியமானது.  வகையில் இன்றைய பதிவில் அம்பு என்ற வார்த்தைக்கான வேறு பெயர்களை பற்றி அறிந்துகொள்வோம்.

அம்பு என்றால் என்ன.?

அந்த காலத்தில் போரில் சண்டையிடுவதற்கு உதவியாக இருந்தது அம்பு தான். இதனை வைத்து நம்மை தற்காத்து கொள்ளலாம். அதாவது போர் நடக்கும் போது நம்மை கொள்ள வருகிறார்கள் என்றால் இந்த அம்பை வைத்து அவரை தாக்கலாம்.

அம்பு என்பது கூர்மையான முனைகளை கொண்டது. ஆரம்ப கால கட்டத்தில் அம்பை மரத்தினால் செய்யப்பட்டது. ஆனால் நாளடைவில் இரும்புகளால் செய்யப்பட்டது. இந்த அம்பை சாதரணமாக ஒருவரை கொள்ள முடியாது. இது ஒரு கலையாக இருக்கிறது. இதை சரியாக குறி வைத்து தக்க வேண்டியிருக்கும்.

அம்பு எறிவதில் சிறந்தவர்களாக அர்ச்சுனன் மற்றும் கர்ணன் இருக்கிறார்கள்.வில்லின் நாணில் வைத்து எய்யப்படும் கூரிய முனை உடைய ஆயுதமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டு:

  • போரில் அர்ச்சுனன் அசுரர்களை தன்னுடைய அம்பால் வீழ்த்தினான்.
  • அம்பு வீச தெரியுமா.?
  • அம்பை குறிபார்த்து வீச தெரிந்திருக்க வேண்டும்.

அம்பு வேறு சொல்:

ambu veru peyar

  1. பாணம்
  2. கணை
  3. சரம்
  4. அஸ்திரம்
  5. வில்
  6. வாளி
  7. மேல் கூறிய வார்த்தைகளில் அம்பு என்ற சொல்லை அழைக்கலாம்.

அம்பு in English:

அம்பை ஆங்கிலத்தில் Arrow, shaft என்ற வார்த்தைகளால் அழைக்கலாம்.

அம்பு எய்தல் in English:

அம்பு எய்வதை Archery என்று கூறுவார்கள்.

வில் வேறு பெயர்கள்:

வில் என்பது பண்டைய காலத்தில் பயன்படுத்திய ஒன்றாக இருக்கிறது. இவை அம்புகளை எய்வதற்கு உதவியாக இருக்கிறது.  வில் என்பதனை பல வார்த்தைகளால் அழைக்கலாம். அதனை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

பிநாகம், சாரங்கம், கோதண்டம், விஜயம், காண்டீபம், கரும்பு போன்ற வார்த்தைகளால் அழைக்கலாம்.

நாயகர்களும் வில்களும்:

  • சிவனின் வில் – பிநாகம்
  • கண்ணனின் வில் – சாரங்கம்
  • இராமனின் வில் – கோதண்டம்
  • கர்ணனின் வில் – விஜயம்
  • அருச்சுனனின் வில் – காண்டீபம்
  • மன்மதனின் வில் – கரும்பு

சிம்மாசனம் வேறு சொல் என்ன தெரியுமா

அல்லி வேறு பெயர்கள்

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now