வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அலட்சியம் வேறு சொல்

Updated On: October 16, 2025 4:56 PM
Follow Us:
alatchiyam veru sol
---Advertisement---
Advertisement

அலட்சியம் வேறு சொல்

பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழி தாய்மொழியாக இருக்கிறது. நம்முடைய நாட்டில் தாய்மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. இந்த தமிழ் மொழியில் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கிறது. இந்த அர்த்தங்களை அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. நாம் பள்ளி பருவத்தில் ஒரு சொல் தரும் பல சொற்கள் என்று படித்திருப்போம்.

ஒரு சொல் தரும் பல சொற்கள் எல்லாம் நாம் பள்ளி பருவத்தில் படித்தது. இப்போது நம்முடைய குழந்தைகளுக்கும் இந்த சொற்கள் வீட்டு பாடமாக கொடுக்கப்படுகிறது. இதற்கு நாம் பதிலை கூகுளில் தான் தேடுவோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அலட்சியம் என்பதற்கான வேறு சொற்களை அறிந்து கொள்வோம் வாங்க..

அலட்சியம் என்றால் என்ன.?

அலட்சியம் என்பது ஒரு விஷயத்தை பற்றி உங்களுக்கு முன்னரே அறிந்தும், அவற்றை பற்றி கவலைப்படாத நிலை தான் அலட்சியம் என்று கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக குழந்தையின் fees 5-ம் தேதி செலுத்த வேண்டும் என்று வைத்து கொள்வோம். இந்த தொகையை செலுத்துவதற்கு பணம் இல்லாமல் இருக்கும். இதனை அறிந்தும் அலட்சியமாக இருக்கும் நிலையை குறிக்கிறது.

இந்த அலட்சியத்தால் பல தீமைகள் நடக்க கூடும். இதில் சில விஷயங்களில் அலட்சியம் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். சில பேர் உங்களை பார்த்து விமர்சனம் செய்தால் அதனை அலட்சியப்படுத்துங்கள். ஏனென்றால் இதனை நீங்கள் இந்த விமர்சங்களை எடுத்து கொண்டால் உங்களின் வாழ்க்கையில் முன்னேற முடியாது. அதனால் இந்த மாதிரி விமர்சனங்களை அலட்சியம் செய்தால் உங்களின் வாழ்க்கையில் முன்னேற முடியும். இந்த அலட்சியத்தை பல வார்த்தைகளில் அழைக்கலாம். அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

அலட்சியம் வேறு பெயர்கள்:

  • பாராமுகம்
  • உதாசீனம்
  • புறக்கணிப்பு
  • அக்கறையின்மை
  • பொருட்படுத்தாமை
  • அஜாக்கிரதை
  • அசட்டை
  • கவனமின்மை
  • கண்டுகொள்ளாமல் இருத்தல்
  • கவனிக்காமல் விட்டுவிடுதல்
  • கண்மூடித்தனம்
  • உன்னிப்பின்மை

மேல் கூறியுள்ள வார்த்தைகளால் அலட்சியம் என்பதனை அழைக்கலாம்.

எடுத்துக்காட்டு:

அக்கறையின்மை: ஒரு விஷயத்தை பற்றி கவலை படாமல் இருப்பது.

கவனக்குறைவு : ஒரு விஷயத்தில் கவக்குறைவாக அல்லது கவனம் இல்லாமல் இருப்பது.

புறக்கணிப்பு : வேண்டும் என்றே ஒரு விஷயத்தை புறக்கணிப்பது.

தொடர்புடைய பதிவுகள் 👇
காணிக்கை வேறு சொல்
அற்புதம் வேறு சொல்
கடினம் வேறு சொல்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now