அல்வா என்பதன் தமிழ் பெயர் இது தானா..?

Advertisement

Halwa Tamil Meaning

பொதுநலம் பதிவின் அன்பு வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக அல்வா என்பதன் தமிழ் பெயர் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக அல்வா பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. அல்வாவில் பல வகைகள் இருக்கின்றன. எல்லா விதங்களிலும் அல்வா தயார் செய்து வித விதமாக சாப்பிட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல், நம் தமிழ் நாட்டில் அல்வாவுக்கென்றே புகழ் பெற்ற ஊர் இருக்கிறது.

அதாவது திருநெல்வேலி என்றவுடனே நம் அனைவருக்கும் சட்டென்று தோன்றுவது  திருநெல்வேலி அல்வா தான். இந்த திருநெல்வேலி அல்வா திருநெல்வேலியில் மட்டுமில்லை உலக அளவில் புகழ் பெற்றதாக இருக்கிறது. சரி உங்களுக்கு அல்வா என்பது தமிழ் பெயரா என்ற யோசனை இருக்கும். அதனால் இப்பதிவின் வாயிலாக அல்வா என்ற பெயரின் தமிழ் பெயர் என்ன என்பதை பற்றி இப்பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!

மேக்அப் என்பதன் தமிழ் சொல் என்ன தெரியுமா

அல்வா என்பதன் தமிழ் பெயர்:

பொதுவாக அல்வா என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி அனைவருக்கும் பிடித்த அல்வா என்பதன் தமிழ் பெயர் தேங்கூழ் என்பதாகும். 

ஹல்வா என்றால் அரபு மொழியில் தேவ இனிப்பு என்று அர்த்தமாகும். அதைத் தழுவிப் பிறந்த உருது-ஹிந்தி மொழிகளிலும் அதே வார்த்தை பயன்படுத்தப்பட்டது. எனவே தேங்கூழ் என்பது தான் அல்வாவின் தமிழ் பெயராகும்.

அதாவது அல்வா என்பது கோதுமை மற்றும் சர்க்கரையிலிருந்து செய்யப்படும் ஒரு இனிப்பு உணவு தின்பண்டமாகும். அல்வா நம் இந்தியாவில் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. அதிலும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை பற்றி சொல்லவே வேண்டாம்.

இந்த திருநெல்வேலி அல்வாவை பற்றி இந்தியா முழுவதும் தெரியும். அல்வா என்றால் அதற்குப் பெயர் பெற்ற இடம் திருநெல்வேலி தான்.

அல்வாவை பல விதங்களில் செய்தாலும் கோதுமையினால் செய்யப்படும் அல்வா மிகவும்  பிரபலமானது ஆகும்.

கோதுமையினால் செய்யப்படும் அல்வா தவிர முந்திாி, கேரட், பால், பீட்ரூட் போன்றவற்றால் செய்யப்படும் அல்வாக்களும் உண்டு. இதனை தவிர தற்போது எல்லா உணவு பொருட்களை வைத்து வித விதமாக அல்வா செய்து வருகிறார்கள். அல்வாக்களில் மிகவும் சுவை மிகுந்த அல்வா என்றால், அது அசோகா அல்வா தான்.

சோபாவின் தமிழ் பெயர் என்ன தெரியுமா..

அல்வா வேறு பெயர்கள் ஆங்கிலத்தில்:

  • Halawa
  • Haleweh
  • Halava
  • Helava,
  • Helva
  • Halwa
  • Aluva
  • Chalva
  • Alva

கேரட் என்பதன் தமிழ் பெயர் இது தானா..

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement