அழிவு என்பதன் வேறு சொல் என்ன | Alivu Veru Peyargal in Tamil..!

Advertisement

அழிவு வேறு சொல்

இந்த உலகத்தில் பிறந்த மனிதர்கள் முதல் பறவைகள், விலங்குகள் என இவ்வாறு பல உயிரினங்கள் இருந்து கொண்டு தான் உள்ளது. இவ்வாறு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் பிறப்பு என்பது ஒன்று இருப்பது போல கண்டிப்பாக இறப்பு என்பதும் இருக்கிறது. அந்த வகையில் இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலமே நமக்கான காலமாக இருக்கிறது. ஆகவே அத்தகைய குறுகிய காலத்தில் நம்மால் எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ முடியுமோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இப்படி இருக்கும் பட்சத்தில் இறப்பு என்று இந்த உலகத்தில் இருப்பது போலவே அழிவு என்பதும் இருந்து கொண்டு தான் உள்ளது.

இதன் படி பார்க்கையில் அழிவு என்பது தானாகவே நடக்கூடியதாக இல்லாமல் இயற்கையின் சீற்றத்தாலும் அழிவு ஏற்படும். எனவே இந்த அழிவு என்ற சொல்லை இடத்திற்கும், நேரத்திற்கும் தகுந்த முறையில் பல முறை கேள்வி பட்டிருப்போம். இத்தகைய வார்த்தியினை அதிகமாக கேட்டு இருந்தாலும் கூட அழிவு என்ற சொல்லுக்கான மற்றொரு சொல் என்ன என்பதை தெரிந்து இருக்க மாட்டோம். அதனால் இன்றைய பதிவில் அழிவு என்பதன் வேறு சொல் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

அழிவு வேறு பெயர்கள்:

அழிவு வேறு பெயர்கள்
நசிவு நாசம் 
பேரழிவு வீழ்ச்சி 
சேதம் சரிவு 
பழுது பாழ் 
சீர்குலைவு கேடு 
பிரளயம் சிதைவு 

 

அழிவு என்றால் என்ன..? | Alivu Meaning in Tamil

அழிவு என்பது ஒரு பொருளின், உயிரினங்களின் என இத்தகைய முறையில் அழிவானது ஏற்படுகிறது. அந்த வகையில் அழிவுகள் பெரும்பாலும் இயற்கையின் பேரிடர், காலநிலை மாற்றம் என இவற்றினால் தான் ஏற்படுகிறது.

எடுத்துக்காட்டாக:

தற்போது சிட்டுக்குருவி என்ற பறவை இனமானது உணவு தட்டுப்பாடு, நவீன விவசாயம் என இதுபோன்ற காரணங்களினால் சிட்டுக்குருவி பறவை இனமானது அழிந்து வருகிறது.

அழிவு Meaning in English:

தமிழில் சொல்லப்படும் அழிவு என்ற சொல்லுக்கான ஆங்கில சொல் Destruction ஆகும்.

கம்ப்யூட்டர் தமிழ் சொல்

ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement