வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அவமானம் வேறு சொல்

Updated On: April 3, 2025 12:24 PM
Follow Us:
avamanam veru sol in tamil
---Advertisement---
Advertisement

அவமானம் வேறு சொல்

நம்முடைய தமிழ் வார்த்தைகள் ஆனது நாம் பயன்படுத்தும் இடத்திற்க்கு தகுந்தது போல அர்த்தம் மாறுபடும். நமக்கு எல்லா அர்த்தங்களும் தெரியுமா என்று கேட்டால் நிச்சயம் தெரியாது. நமக்கு தெரிந்த அர்த்தங்களை வைத்து பேசுவோம். அது போல பள்ளி பருவத்தில் ஒரு சொல்லுக்கான பல பொருள் தரும் சொற்களை படித்திருப்போம். அதன் பிறகு நம்முடைய குழந்தைகளுக்கு வீட்டு பாடமாக கொடுத்திருப்பார்கள். இல்லையென்றால் அரசு பொது தேர்வுகளுக்கு தாயாருகிறவர்கள் இந்த மாதிரி சொற்களை prepare செய்வார்கள். அந்த அக்காலத்தில் எல்லாம் ஒரு வார்த்தைக்கான பொருள் தெரியவில்லை என்றால் புத்தங்களை புரட்டினார்கள். ஆனால் இந்த காலத்தில் உலகமே கையில் தான் உள்ளது. ஆமாங்க எந்த விஷயம் தெரியாமல் இருந்தாலும் மொபைலில் தான் போட்டு தெரிந்து கொள்கிறார்கள். அந்த வகையில் நீங்கள் அவமானம் என்பதற்கு வேறு சொற்களை பற்றி தேடி கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.! தொடர்ந்து படித்து பயன் பெறுங்கள்.

அவமானம் என்றால் என்ன.?

அவமானம் என்பது நம்முடைய மரியாதையை குறைக்கும் விதத்தில் நடக்கப்டும் எந்த செயலையும் குறிக்கிறது. இந்த செயல் பெரும்பாலும் மற்றவர்களின் முன்னிலையில் நடக்க கூடியதாக இருக்கும். மனிதர்களாக பிறந்த அனைவருமே ஏதாவது ஒரு இடத்தில் அவமானத்தை கடந்து தான் வந்திருப்போம்.

அதாவது பள்ளி பருவத்தில் எல்லாருக்கும் முன்னிலையில் ஆசிரியர் உங்களை திட்டிருப்பார்கள். ஏன் மதிப்பெண்  எடுக்கவில்லை என்று எல்லாரும் முன்னிலையில் நாம் தலைகுனியும் படி வார்த்தைகளை பயன்படுத்தி திட்டிருப்பார்கள். அதுவே தொழில் செய்ய கூடிய இடத்தில் நீங்கள் எதாவது தவறு செய்திருக்கலாம். அந்த தவறை உங்களை தனியாக கூப்பிட்டு திட்டாமல் எல்லாரும் முன்னிலையில் இது கூட தெரியவில்லையா என்று அவமானப்படுத்திருப்பார்கள்.

இவ்வளவு ஏன் நீங்கள் வண்டியிலோ அல்லது சைக்கிளில் செல்லும் போது கீழே விழுந்து விடுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அப்போது எழுந்து வந்து விடுவீர்கள். வீட்டிற்கு வந்த பிறகு வீட்டில் உள்ளவர்களிடம் கீழே விழுந்துட்டேன் அம்மா எல்லாருக்கும் முன்னாடி ஒரே அவமானமாக போகிடுச்சு என்று கூறுவீர்கள். இதற்கான எடுத்துக்காட்டு மற்றும் வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம்.

எடுத்துக்காட்டு:

அவமானம் பொருள்

நண்பர்களின் முன்னிலையில் நீ அவனை அவமானபடுத்தியது தவறு.

ஆசிரியர் நேற்று ஏன் மதிப்பெண் எடுக்கவில்லை என்று எல்லாரும் முன்னிலையில் அவமானப்படுத்தினார்.

வெற்றி என்ற சொல்லுக்கு இணையான வேறு சொற்கள் என்னென்ன தெரியுமா

அவமானம் வேறு பெயர்கள்:

அவமானம் என்பதை பல வார்த்தைகளால் அழைக்கலாம், அதனை பற்றி காண்போம்.

அவமதிப்பு

மானக்கேடு

அவமானம் In English:

அவமானம் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எப்படியெல்லாம் அழைக்கலாம் என்று கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

Disrespect, Contempt, Dishonour, Ignominy, Disgrace போன்ற வார்த்தைகளால் அழைக்கலாம்.

அவமானம் எதிர்சொல்:

  • மரியாதை
  • புகழ்
  • கீர்த்தி
  • கௌரவம்
  • மானம்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now