ஆசை என்ற சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்..! | Aasai Veru Sol

Advertisement

Aasai Veru Sol | ஆசை வேறு சொல்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆசை வேறு பெயர்கள்/ஆசை வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். மனிதர்களுக்கு இருக்கும் உணர்வுகளில் ஆசையும் ஒன்று. இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதர்க்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். அதாவது, நாம் ஏதேவொரு பொருள் அல்லது ஏதோவொன்றின் மீது அதிக ஆசை கொள்வோம். இதனை நாம் செய்தே தீர வேண்டும், வாங்கியே தீர வேண்டும் என்று பிடிவாத குணத்துடன் இருப்போம்.இங்கு தான் ஆசை உருவாகிறது. மேலும், இந்த ஆசையானது ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடும்.

ஆசை என்ற வார்த்தை ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமான வார்த்தைகளில் கூறப்படுகிறது. அதாவது, ஆசை என்ற சொல் இடத்திற்கு ஏற்ப மற்றம் அடைந்து கொண்டே இருக்கும். எனவே, ஆசை என்ற சொல்லை வேறு எவ்வாறெல்லாம் கூறலாம்.? என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஆசை வேறு பெயர்கள்:

  • விருப்பம்
  • ஆர்வம்
  • அவா
  • ஈடுபாடு
  • நாட்டம்
  • பிடித்தம்
  • காதல்
  • அன்பு
  • நேசம்
  • ஆவல்
  • பாசம்
  • பிரியம்
  • பிடிப்பு
  • இஷ்டம்
  • பற்று
  • வாஞ்சை
  • வேட்கை
  • மனோரம்

ஆசை என்றால் என்ன.?

ஆசை என்பது அழிவில்லாத ஒரு உணர்வு ஆகும். ஒரு மனிதனுக்கு எதை தேவையோ அல்லது பிடித்ததோ அதை அதனை தம்மிடம் கொண்டு வருவதற்கான உணர்வாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும்.

குதிரைக்குரிய தூய தமிழ்ச் சொல் என்ன தெரியுமா ?

எடுத்துக்காட்டு வாக்கியம்:

நான் மருத்துவர் ஆக வேண்டும் என்பது எனது ஆசை.

நான் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை.

இவ்வுலகை முழுவதும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதே மிகப்பெரிய ஆசை.

ஐபோன் வாங்க வேணும் என்பதே எனது நீண்டநாள் ஆசை.

ஆசை என்பதன் எதிர்சொல்:

ஆசை என்பதன் எதிர்சொல் நிராசை என்பது ஆகும்.

ஆசை in English Word:

ஆசை என்பதை ஆங்கிலத்தில் Desire என்று கூறுவார்கள்.

கூந்தல் வேறு பெயர்கள்

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement