ஆயுதம் வேறு சொல் | Aayutham Veru Peyargal in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆயுதம் என்பதற்கான வேறு சொல் என்ன என்பதை (Aayutham Veru Peyargal) பின்வருமாறு கொடுத்துள்ளோம். என்னதான் நாம் தமிழ் நன்றாக பேசினாலும், தமிழில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் பற்றி தெரிவதில்லை. அர்த்தம் தெரியாதலால் அதற்கு வேறு ஏதேனும் பெயர் உள்ளதா என்று கேட்போம். அதாவது, எடுத்துக்காட்டாக, கார்ப்பு என்றால் நம்மில் பலருக்கும் தெரியாது. அதுவே காரம் என்றால் அனைவருக்கும் தெரியும். இதுபோன்று நமக்கு தெரியாத பல வார்த்தைகள் உள்ளது.
எனவே, அதனை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் ஆயுதம் என்ற சொல்லிற்கான வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஆயுதம் என்ற சொல்லிற்கான வேறு சொல் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
ஆயுதம் என்றால் என்ன.?
ஆயுதம் அல்லது படைக்கலம் என்பது, பிறரை காயப்படுத்தவோ, கொல்லவோ அல்லது பொருளினை அழிக்கவோ சேதப்படுத்தவோ பயன்படுத்தப்படும் கருவி ஆகும். அதாவது, சேதத்தினை ஏற்படுத்தக்கூடிய பொருளினை ஆயுதம் எனலாம். பெரும்பாலும் ஆயுதங்கள் போர்க்களத்தில் தான் பயன்படுகிறது.
அக்காலத்தில் வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், கதை, கவை, கல்லிடு கூடை, கணையம், கழுகுப்பொறி, கவசம், குத்துவாள், கைவாள், கொடுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிபாலம், ஞாயில், மழுவாள், விளைவிற்பொறி, அரிதூற்பொறி, இருப்பு முள், எரிசிரல், கழு, கருவிலூகம், கல்லமிழ் கவண், கற்றுப்பொறி, கழுமுள், குந்தம், கூன்வாள், கைபெயர், கோடாரி, சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வச்சிரம் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்தார்கள்.
ஆனால், தற்காலத்தில் துப்பாக்கி, ஏவுகனை, பீரங்கி, உந்துகனை, எறிகணை, மிதிவெடி, குண்டுவிமானம், போர்க்கப்பல் போன்றவை ஆயுதங்ககளாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால்,நமக்கு தெரிந்த ஆயுத்தங்களாக வில், அம்பு , ஈட்டி மட்டுமே இருக்கிறது.
324 IPC – ஆயுதம் வைத்து தாக்கிய குற்றத்திற்கு இந்த தண்டனை தான்..!
ஆயுதம் வேறு பெயர்கள்:
- கருவி
- படைக்கலம்
- சாதனம்
- உபகரணம்
- சாமான்
- கலன்
மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் ஆயுதம் என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் ஆகும்.
ஆயுதம் in English Name:
ஆயுதம் என்பதை ஆங்கிலத்தில் Weapon என்று கூறுவார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |