ஆர்ப்பாட்டம் என்பதற்கான வேறு சொல்..!

Advertisement

ஆர்ப்பாட்டம் வேறு சொல்

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஆர்ப்பாட்டம் என்பதற்கான வேறு சொல் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் வேறு சொல் என்பது இருக்கும். ஆனால், அதனை பற்றி நம்மில் பலபேருக்கு தெரிவதில்லை.

அந்த வகையில் தமிழ் வார்த்தைகளில் ஒன்றான ஆர்ப்பாட்டம் என்பதற்கான வேறு சொல் என்ன என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Arpattam Veru Sol in Tamil:

  • போராட்டம் 
  • அலப்பறை 
  • வெற்று ஆரவாரம்
  • அமர்க்களம்
  • தேவையற்ற கெடுபிடி
  • தேவையற்ற பகட்டு
  • தேவையற்ற ஆடம்பரம்

ஆர்ப்பாட்டம் என்றால் என்ன.?

ஆர்ப்பாட்டம் பல வகையான இடங்களில் பல வகைகளில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அதாவது, ஆர்ப்பாட்டம் என்பது, ஒரு சூழ்நிலை அல்லது ஒரு நிகழ்வுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதே ஆர்ப்பாட்டம் ஆகும். ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் என்பது பெரும்பாலான இடங்களில் மக்களால் நடத்தப்படும் போராட்டம் ஆகும்.

அதுவே, ஒரு குழந்தை தனமான அல்லது விளையாட்டு தனமாக நாம் செய்யும் சிறு சிறு விஷயங்களையும் அலப்பறை, ஆர்ப்பாட்டம் என்று கூறுவார்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் வீட்டில் ஒரு விஷயத்தை நடத்த சொல்லியோ அல்லது இந்த பொருள் எனக்கு வேண்டும் என்று பிடிவாத தனமாக பொருட்களை உடைப்பது போன்ற செயல்களை செய்வதை, நம் வீட்டில் உள்ளவர்கள் என்னென்ன ஆர்ப்பாட்டம் பண்ணுகிறாள் என்று கூறுவார்கள்.

இவ்வாறு ஒரு விஷயம் நடந்தே ஆக வேண்டும் என்பதற்காக பிடிவாதமாக இருப்பது ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் எனப்படும். பல நோக்கங்களுக்காக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆர்ப்பாட்டம் in English:

ஆர்ப்பாட்டம் என்ற தமிழ் சொல்லினை ஆங்கிலத்தில் Demonstration என்று குறிப்பிடுவார்கள்.

தொடர்புடைய பதிவுகள் 
கிரீடம் என்பதற்கான வேறு சொல்..!
சக்கரம் என்பதை வேறு எப்படிஎல்லாம் சொல்லலாம்..?
நஞ்சு என்பதற்காக வேறு பெயர்கள்..!
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement