இடைஞ்சல் என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

இடைஞ்சல் வேறு சொல் | இடைஞ்சல் தமிழ் பொருள்

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு பெயர்கள். அதில் மனிதர்களுக்கும், நாம் பேசும் சொற்களுக்கும் பல சொற்கள் இருக்கிறது. அவை எல்லாமே நமக்கு தெரியாது. எடுத்துக்காட்டாக சொல்ல போனால் கஷ்ட காலம் என்பதற்கு துன்ப காலம், போரத காலம் போன்றவற்றால் அழைக்கலாம். இது போல நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல வார்த்தைகள் இருக்கிறது.

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இடைஞ்சல் எனப்தற்கான வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் அனைவருமே இடைஞ்சல் என்ற சொல்லினை கேட்டு இருப்போம், நாமும் பலமுறை கூறி இருப்பின். ஆனால், இடைஞ்சல் என்பதற்கான வேறு சொல் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் இடைஞ்சல் என்றால் என்ன.? அதன் வேறு சொல் என்ன.? என்பதை பின்வருமாறு விவரித்துளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

கப்பம் என்பதன் வேறு சொல் என்ன.?

இடைஞ்சல் தமிழ் பொருள்:

ஒரு செயலை செய்யும்போது, அச்செயலை செய்ய முடியாத அளவிற்கு தொடர்ந்து தொந்தரவு ஏற்பட்டு கொண்டிருந்தால் அதனை தான் இடைஞ்சல் என்று கூறுவார்கள். இதனை பெரும்பாலும் இடையூறு என்றும், தொந்தரவு என்றும் கூறுவார்கள். இவ்வாறு ஏற்படும் இடைஞ்சல்கள் சில நேரணைகளில் நமக்கு நன்மை அளிப்பதாகவும் சில நேரங்களில் தீமை அளிப்பதாகவும் இருக்கும்.

எடுத்துக்காட்டு:

நீங்கள் ஒரு வேலையை இத்தனை மணிக்குள் செய்து முடித்து விட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கும்போது, அதனை செய்து முடிக்க முடியாத அளவிற்கு ஏதெனும் தொந்தரவு ஏற்படுமாயின் அது தான் இடைஞ்சல்.

அப்படி இடைஞ்சல் ஏற்படும்போது, நாம் அனைவருமே. நமக்கு இப்போது நேரம் சரியில்லை என்று நினைக்கிறன் என்று கூறுவோம். அந்த அளவிற்கு இடையூறு ஏற்படும். இடைஞ்சல் சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக தோன்றும். இந்த இடைஞ்சல் என்ற சொல்லினை பல விதங்களில் கூறலாம்.

அம்மா இன்று என் நண்பரிடம் பேசி கொண்டிருந்தேன், அப்போது சுபா அவனிடம் பேச முடியாத வகையில் இடைஞ்சல் செய்து கொண்டிருந்தாள்.

பேருந்தில் செல்ல முடியவில்லை ஒரே இடைஞ்சலாக இருக்கிறது.

இடைஞ்சல் வேறு பெயர்கள் | இடையூறு வேறு சொல் | குந்தகம் வேறு சொல்:

  • இடர்பாடு
  • இடையூறு
  • தடங்கல்
  • தடை
  • தொந்தரவு
  • உபத்திரம்
  • தொல்லை
  • ஊறு
  • ஊறுபாடு
  • குந்தகம்

மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் இடைஞ்சல் என்பதற்கான வேறு சொல் ஆகும்.

பணிப்பெண் வேறு சொல்..!

இடைஞ்சல் Meaning in English:

இடைஞ்சல் என்பதை ஆங்கிலத்தில் obstacle, obstruction என்று கூறுவார்கள்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement