இன எழுத்து சொற்கள் எடுத்துக்காட்டுடன்..!

Advertisement

இன எழுத்து சொற்கள் 10

வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் இன எழுத்துக்கள் என்றால் என்ன.? இன எழுத்து சொற்கள் என்னென்ன.? போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம் வாங்க. தமிழ் மொழி எளிமையானது என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால், தமிழில் இலக்கணம் பற்றி நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது. அப்படி நாம் கற்றுக்கொள்ள வேண்டியதில் இன எழுத்து சொற்களும் ஒன்று.

முக்கியமாக, பள்ளி செல்லும் குழந்தைகள் இன எழுத்து சொற்கள் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஆகையால், இப்பதிவில் இன எழுத்துக்கள் என்றால் என்ன.? இன எழுத்து சொற்கள் என்னென்ன.? போன்றவற்றை விவரித்துள்ளோம். வாங்க தெரிந்துகொள்வோம்.

இன எழுத்துக்கள் என்றால் என்ன.?

சில எழுத்துக்களுக்கு இடையே ஒழிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை காணப்படும். இவ்வாறு உள்ள எழுத்துக்கள் இன எழுத்துக்கள் எனப்படும். ஆதாவது, ஒரு சில எழுத்துக்கள் பிறக்கும் போது ஒற்றுமைகளோடு பிறக்கும். அது பிறக்கக்கூடிய இடம், ஒலிக்கும் முயற்சி ஆகியவற்றில் ஒற்றுமைகள் இருக்கும். இதனை தான் இன எழுத்துக்கள் என்கிறோம். இப்போது, தமிழ் மொழியில் எந்த எழுத்துக்கள் எல்லாம் இன எழுத்துக்களாக வரும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு வல்லின எழுத்துக்கும் அதற்கு நிகரான மெல்லின மெய் எழுத்துக்கள் இன எழுத்தாக வரும்.

வல்லின எழுத்துக்கள் – கசடதபற ( க், ச், ட், த், ப், ற்)

மெல்லின எழுத்துக்கள் – ஙஞணநமன (ங், ஞ், ண், ந், ம், ன்)

எடுத்துக்காட்டு: ங் வந்தது என்றால், அதற்கு அருகில் கசடதபற என்ற சொற்களில் ஏதேனும் ஒன்று இணை எழுத்தாக வரும்.  (சிங்கம்)

இன எழுத்துக்கள் யாவை:

இன எழுத்துக்கள்  எடுத்துக்காட்டு 
(ங்,க்) திங்கள், சிங்கம், சங்கு
(ஞ்,ச்) மஞ்சள், பஞ்சு, வஞ்சம், இஞ்சி
(ட்,ண்) மண்டபம், நண்டு, சுண்டல், பண்டம், வண்டு
(த்,ந்) சந்தனம், பந்தல், பந்து, பொந்து, சந்து
(ம்,ப்) அம்பு, தம்பி, தும்பி, பம்பரம்
(ற்,ன்) தென்றல், நன்றி, கன்று
ய், ர், ல், வ், ழ், ள் கல்வி,செல்வம்,பெரியவர்,

உயிரெழுத்துக்கள்:

ஒவ்வொரு நெடில் எழுதிற்கும் அதற்கு நிகரான குறில் எழுத்து இன எழுத்து ஆகும்.

  • அ,ஆ
  • இ,ஈ
  • உ,ஊ
  • எ,ஏ
  • ஐ,இ
  • ஒ,ஓ
  • ஔ,உ

இன எழுத்து சொற்கள் 50:

  1. திங்கள்
  2. சிங்கம்
  3. ங்கு
  4. ஞ்சள்
  5. இஞ்சி
  6. பஞ்சு
  7. ஞ்சம்
  8. ண்டபம்
  9. பண்டம்
  10. ந்தனம்
  11. ந்தல்
  12. ந்து
  13. பொந்து
  14. சந்து
  15.  அம்பு
  16. ம்பி
  17. தும்பி
  18. தென்றல்
  19. ல்வி
  20. செல்வம்
  21. தங்கம்
  22. கம்பம்
  23. குடும்பம்
  24. இன்பம்
  25. துன்பம்

இன எழுத்துக்கள் இல்லாத தமிழ் எழுத்து:

இன எழுத்துக்கள் இல்லாத தமிழ் எழுத்து ஆயுத எழுத்து (ஃ) ஆகும்.

தொடர்புடைய பதிவுகள் 👇
தமிழ் உயிர்மெய் எழுத்துக்கள்
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள்
மெய் எழுத்துக்கள் சொற்கள்

 

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement