இயல்பு வேறு சொல் | Iyalpu Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இயல்பு என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக தமிழில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தம்இருக்கும், அதேபோல் அந்த சொல்லினை குறிக்கும் வேறு சொற்களும் இருக்கும். அதாவது வேறு சொல். வேறு சொல் தேர்வுகளில் கேட்கப்படும் தமிழ் கேள்விகளில் ஒன்று.
எனவே, நாம் அனைவருமே வேறு சொல் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில், நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றைய பதிவில் இயல்பு என்ற வார்த்தைக்கான வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே, நீங்கள் இயல்பு வேறு சொல் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
இயல்பு என்றால் என்ன.?
இயல்பு என்பது, இயற்கையாக காணப்படுவது அல்லது நிகழ்வது ஆகும். அதாவது இயல்பு என்பதை வழமையான நிலை என்று கூறலாம். இயல்பு என்பது தமிழில் பயன்படுத்தப்படும் பொதுவான சொல் ஆகும். பேச்சுவழக்கில் கூட அது இயல்பான ஒன்று என்று நாம் அனைவருமே கூறி இருப்போம்.
கோந்து என்பதன் வேறு சொல் என்ன.?
இயல்பு என்பதன் வேறு சொல்:
இயல்பு என்ற சொல்லினை குறிக்கும் வேறு சொல் சாதாரணம் ஆகும். பெரும்பாலும் இயல்பு என்பதை சாதாரணம் என்று கூறுவார்கள்.
இயல்பு in English Words:
இயல்பு என்பதை ஆங்கிலத்தில் Nature/Normal என்று சொல்லலாம்.
எடுத்துக்காட்டு:
இயல்பு என்பது எப்போதும் வளாகத்தில் உள்ளதை/நடக்கக்கூடியதை குறிக்கக்கூடிய சொல் ஆகும். இயற்கையாக நிகழக்கூடியது. சூழ்நிலைக்கு ஏற்ப நிகழக்கூடியது. இதனை தான் இயல்பு என்று கூறுவார்கள்.
இயல்பு நிலை என்று கூறி நாம் அனைவருமே அறிந்திருப்போம். இயல்பு நிலை என்பது வழக்கமாக இருக்கக்கூடிய நிலை ஆகும். எடுத்துக்காட்டாக, 2 நாட்களாக மழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்தது. இப்போது தான் இயல்பு நிலைக்கு வந்திருக்கிறது என்று கூறுவார்கள். இதில் இயல்பு நிலை என்பது, எப்போதும் போல்/ வழக்கமான நிலையில் இருந்த சாலையை குறிக்கிறது.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.