உடல் வேறு சொல்
நாம் அனைவருக்குமே ஒரு மாதிரியான ஆசை ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து தகவலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவு இருக்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம்.
ஆனால் அது சரியான தகவலைகளை நமக்கு அளிக்குமா என்றால் அது சிறிய சந்தேகம் தான். அதனால் தான் அப்படிப்பட்ட ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் உடல் என்ற சொல்லுக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உடல் என்பதற்கான சரியான வரையறை:
இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உடல் என்பது அவசியமாக காணப்படுகின்றது. உயிர் நிலையானது ஆனால் உடல் அழிவடையக்கூடியது. உயிர் இன்றி உடல் இயங்காது. உடல் என்பது மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவம் ஆகும்.
உடல் என்பது ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். உடல் அழிவுறும் என அறிந்து அதனை அழகுபடுத்துவதற்கு என பல வேலைப்பாடுகளை செய்கின்றனர். ஆனால் எது எவ்வாறாக இருப்பினும் உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.
இப்படிப்பட்ட மிகவும் முக்கியமான உடலை தமிழ் மொழியில் வேறு சில சொற்களாலும் குறிப்பிடபடுகிறது.
உடல் வேறு சொல்:
உடல் என்பதை,
- உடம்பு
- சரீரம்
- தேகம்
- மெய்
- மேனி
- அங்கம்
- யாக்கை
- கட்டை
- காயம்
- முண்டம் (தலை இல்லாத உடல்)
- சடலம் (இறந்த உடல்) போன்ற வேறு சொற்களாலும் இந்த உடல் என்பதை நமது தமிழ் மொழியில் குறிப்பிடப்படுகிறது.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |