வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உடுக்கை வேறு சொல்

Updated On: April 15, 2025 3:00 PM
Follow Us:
udukkai veru peyargal in tamil
---Advertisement---
Advertisement

உடுக்கை வேறு சொல்

நம்முடைய தமிழ் வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்கே பல அர்த்தங்கள் இருக்கிறது. அர்த்தங்கள் மட்டுமில்லை பல சொற்களும் இருக்கிறது. ஆனால் அதிகமாக புழக்கத்தில் இருக்க கூடிய வார்த்தைகள் மட்டும் தான் தெரிகிறது. மற்ற வார்த்தைகளை பயன்படுவதற்கு தவறுகிறோம். அதனால் தான் நம்முடைய பதிவில் தினந்தோறும் ஒரு வார்த்தைக்கான பல சொற்களை பதிவிட்டு வருகிறோம். அதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த பதிவில் கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள். இந்த பதிவில் உடுக்கை என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உடுக்கை என்றால் என்ன.?

உடுக்கை வேறு சொல்

உடுக்கை என்பது கிராமிய இசைக்கருவிகளில் ஒன்றாக இருக்கிறது. அதிலும் மாரியம்மன் கோவில்களில் இந்த உடுக்கையானது காணப்படும். நம்முடைய முன்னோர்களின் காலத்தில் அம்மை போட்டவர்களுக்கு அம்மையை நீக்குவதற்கு இந்த உடுக்கையை பயன்படுத்தி அடிப்பார்கள். அதுமட்டுமில்லாமல் கிராமத்தில் ஏதாவது செய்தியை சொல்வதற்கு இந்த உடுக்கையை பயனப்டுத்தி தான் எல்லாரையும் கூப்பிடுவார்கள்.

அதுமட்டுமில்லாமல் குடுக்குடுப்புகார் என்று கூறுவார்கள். இவர்கள் ஊர்களுக்கு வந்து ஒவ்வொரு வீட்டின் வாசலில் நின்று குறி சொல்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் குறி சொல்வதற்கு முன்னடியும் சரி, குறி சொல்லும் போதும் சரி இந்த உடுக்கையை அடித்து கொண்டு தான் குறி சொல்வார்கள்.

உடுக்கை அமைப்பு:

உடுக்கை என்பதை இரண்டு விதத்தில் அர்த்தங்கள் உள்ளது. அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

உடுக்கை என்பது ஒரு மணி நேர கண்ணாடி வடிவிலான இடக்கையின் சிறிய பதிப்பாகும்.இந்த கருவி சுமார் 8 முதல் 10 அங்குல நீளம் கொண்டது. இதன் இரு முனைகளிலும் 6 முதல் 8 அங்குல சுற்றளவு மற்றும் மையத்தை கொண்டுள்ளது.

இந்த உடுக்கையானதுஆரம்பத்தில்  களிமண்ணால் செய்யப்பட்டது. அதன் பிறகு மரத்தால் செய்யப்பட்டது. அதன் பிறகு பலா மரத்தின் பட்டைகள் மூலம் செய்யப்பட்டது. இதனின் உடல் பகுதியானது பித்தளை மூலம் செய்யப்பட்டது. கருவியின் முனை முதல் ஆனது மற்றொரு முனை வரைக்கும் சரங்கள் ஆனது தோல் மூலம் செய்யப்பட்டது.

இன்னொரு அர்த்தமாக நாம் உடுத்தும் துணியை கூறுவார்கள். நம்முடைய முன்னோர்களின் காலத்தில் இந்த உடுக்கையானது பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த வார்த்தை பயன்படுத்தவில்லை.

உடுக்கை வேறு பெயர்கள்:

உடுக்கை என்பது பல வார்த்தைகளால் அழைக்கலாம்.

  • அடுக்கை
  • அங்கவஸ்திரம்
  • உடை
  • துணி
இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now