Unavu Palamoligal
நம் முன்னோர்கள் வாழ்க்கையின் தத்துவதை ஒரு வரி பழமொழியில் கூறியுள்ளார்கள். நாம் இன்றைய காலகட்டத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை பழங்கால பழமொழிகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு அவர்கள் வாழ்க்கையின் தத்துவத்தை அறிந்து வாழ்ந்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் கூறிய பழமொழிகளில் முக்கிமானது உணவு பற்றிய பழமொழி ஆகும்.
நாம் உயிர் வாழ்வதற்கு இன்றையமையாது உணவு. அப்படிப்பட்ட உணவை நாம் எப்படி உண்ண வேண்டும்.? எந்த உணவுகளை உன்ன வேண்டும்.? என்பதை பழமொழி வடிவில் நமக்கு கொடுத்து சென்றுள்ளார்கள். எனவே, நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற உணவு பற்றிய பழமொழிகளை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
உணவு பற்றிய பழமொழிகள்:
- நொறுங்கத் தின்றால் நூறு வயது.
- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
- ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
- நொறுங்கத் தின்றால் நூறு வயது.
- பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.
- பணம் பந்தியிலே குணம் குப்பையிலே.
- பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
- முழு பூசணியைச் சோற்றில் மறைக்காதே.
- வாழ்வதற்காக உண்; உண்பதற்காக வாழாதே.
- விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
- விளையும் பயிர் முளையிலே தெரியும்.
- உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
- உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
- கடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே.
- வினை விதைத்தவன் வினை அறுப்பான்
- தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
- வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்
- உண்டதும் குளித்தால் உடலில் சேராது.
- ராத்திரி சாப்பாடு நாழி தூரம் நடை.
- பசித்த பின்பு புசி பசிக்காவிட்டால் யோசி.
- உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு.
- சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை.
- உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
- பாலுக்கு மிஞ்சின சுவையுமில்லை; பல்லக்குக்கு மிஞ்சின சொகுசுமில்லை.
- வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
- ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
- விருந்தும் மருந்தும் மூன்றே நாள்
- தேனும் தினை மாவும் தேவர்க்கு அமிர்தம்
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
- .இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு, கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு
- வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி
- பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்
- உற்றார் தின்றால் புற்றாய் விளையும், ஊரார் தின்றால் பேராய் விளையும்.
உணவு பழக்கம் பழமொழி வடிவில்:
- சீரகம் இல்லா உணவு சிறக்காது.
- தன் காயம் காக்க வெங்காயம் போதும்.
- வாழை வாழ வைக்கும்.
- அவசர சோறு ஆபத்து.
- இறப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.
- இரத்தக்கொதிப்புக்கு அகத்திக்கீரை.
- இருமலை போக்கும் வெந்தயக்கீரை.
- உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
- உஷ்ணம் தணிக்க கம்பங்களி.
- கல்லீரல் பலம்பெற கொய்யா பழம்.
- கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை.
- சித்த தெளிய வில்வம்.
- குடல்புண் நலம்பெற அகத்திக்கீரை.
- சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி.
- சூட்டை தணிக்க கருணைக்கிழங்கு.
- ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்.
- தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு.
- தேனுடன் இஞ்சி இரத்தத்தூய்மை.
- மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு.
- வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.
- வாத நோய் நீங்க அரைக்கீரை.
- வாய் துர்நாற்றம் நீங்க ஏலக்காய்.
- பருமன் குறைய முட்டைகோஸ்.
- பித்தம் தணிக்க நெல்லிக்காய்.
50 பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிந்துகொள்வோம்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |