உதவாக்கரை வேறு சொல்..! | Uthavaakarai Veru Sol In Tamil..!

Advertisement

உதவாக்கரை வேறு சொல்

வாசிப்பாளர்களுக்கு வணக்கம் நம் பொதுநலம் வலைத்தளத்தில் தினமும் ஒவ்வொரு சொலுக்கான வேறு சொல்லை பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் உதவாக்கரை என்ற சொல்லுக்கான வேறு சொல்லை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். தமிழ் மொழியில் பல்வேறு சொற்கள் இருக்கின்றன. அதில் ஒவ்வொரு சொல்லுக்கும் பல வேறு சொற்கள் இருக்கின்றன.

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய சொற்களுக்கு கூட வேறு சொற்கள் இருக்கிறது. அந்த வேறு சொற்கள் அனைத்தையும் நாம் அறிவதில்லை. வேறு வேறு சொற்கள் இருந்தாலும் அதற்கு பொருள் ஒன்று தான். எனவே இப்பொழுது உதவாக்கரை சொல்லுக்கான வேறு சொல்லை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

நகல் வேறு சொல்

உதவாக்கரை என்றால் என்ன:

உதவாக்கரை என்றால், பயனற்ற அல்லது எந்த வேலையும் செய்யாத ஒருவரைப் பற்றிப் பேசும் ஒரு சொல். அதாவது ஒரு நபர் எந்த வேலையும் செய்யாமல் நேரத்தை வீணாக்கும் பொழுது அவரை திட்டுவதற்காக உதவாக்கரை என்னும் சொல்லை பயன்படுத்துகிறாரகள்.

பொதுவாக உதவாக்கரை என்னும் சொல்லை ஒருவரை திட்டுவதற்காக தான் பயன்படுத்துவார்கள். ஒருவர் எந்த வேலையும் உருப்படியாக செய்யவில்லை என்றாலும் உதவாக்கரை வார்த்தை பயன்படுத்தி திட்டுவார்கள்.

உதவாக்கரை வேறு சொல்:

  • கயவன்
  • இழிமகன்
  • போக்கிரி
  • பயனற்றவன்
  • சோம்பேறி
  • உபயோகமற்றவன்

உதவாக்கரை In English:

  • Worthless Fellow
  • Useless Fellow
  • as useless as a crumbling bank

எடுத்துக்காட்டு:

  • அந்த கயவன் பலரை மோசடி செய்தான்.
  • அவன் மற்றவர்களை இழிவுபடுத்தும் இழிமகன்.
  • அந்த போக்கிரி அண்டை வீட்டில் திருடிவிட்டு ஓடி மறைந்தான்.
  • அவன் முழுநேரமும் விளையாடி, பயனற்றவனாக இருக்கிறான்.
  • என் நண்பன் ஒரு சோம்பேறி; தினம் முழுவதும் படுத்திருப்பான்.
  • அவன் குழுவில் சேர்ந்து இருந்தும், எந்த உதவியும் செய்யவில்லை; உபயோகமற்றவன் தான்.

மதில் வேறு சொல்

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement