உபவாசம் என்றால் என்ன.? | What is Upavasam in Tamil

Advertisement

Upavasam Meaning in Tamil

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஒரு பயனுள்ள தகவல் ஒன்றினை பற்றி பார்க்கலாம் வாங்க. பொதுவாக நாம் சில வார்த்தைகளை அதிகமாக கேட்டு இருப்போம். ஆனால் அதற்கான அர்த்தம் என்பது நமக்கு தெரியாது. அப்படி நீங்கள் கேள்விப்பட்டிருக்கும் வார்த்தைகளில் ஒன்றுதான் உபவாசம். உபவாசம் என்பது, அனைத்து மதங்களும் பின்பற்றக்கூடிய ஒரு முறையாகும். எனவே, உபவாசம் என்றால் என்ன.? என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உபவாசம் என்றால் என்ன.?

உபவாசம் என்றால் நாம் சாப்பிடும் உணவின் அளவை குறைத்தல் அல்லது ஒதுக்குதல் என்று பொருள்படும். அதாவது, ஒரு நாள் அல்லது சில தினங்கள் நாம் உண்கின்ற உணவை குறைத்தோ அல்லது முழுவதும் உண்ணாமல் இருந்தோ இறை தியானத்தில் இருக்கும் முறையாகும்.

உபவாசம், நோன்பு என்பது விரதத்துடன் தொடர்புடைய சொல்லலாகும். இவை தவிர்த்து முக்கியமாக, உபவாசம் என்பது இறைவன் அருகே இருத்தல் என்ற பொருளை தருகிறது.

தற்குறி என்றால் என்ன

உபவாசத்தின் வகைகள் என்ன.?

உபவாசத்தில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளது. அதாவது சாதாரண உபவாசம், பகுதிநேர உபவாசம் மற்றும் முழு உபவாசம். இவற்றின் பற்றிய விவரங்களை பின்வருமாறு விளக்கமாக பார்க்கலாம்.

சாதாரண உபவாசம்:

சாதராண உபவாசம் என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உணவு உண்ணாமல் இறை தியானம் மேற்கொள்ளும் முறையாகும்.

பகுதிநேர உபவாசம்:

பகுதிநேர உபவாசம் என்பது சிறிதளவு உணவை எடுத்துக்கொள்ளும் முறையாகும்.

முழு உபவாசம்:

முழு உபவாசம் என்பது, உடலுக்குள் எந்தவகையான நீர் ஆதாரமோ மற்றும் உணவோ எடுத்துக்கொள்ளாமல் நாள் உழுவதும் இருக்கும் முறையாகும்.

அனுகூலம் என்றால் என்ன. அனுகூலம் சொல்லின் வேறுபெயர்கள் என்ன

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement