Uruthimoli Veru sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் உறுதிமொழி என்பதற்கு வழங்கப்படும் வேறு சொற்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். உறுதிமொழி பற்றி நம் அனைவருக்குமே தெரியும். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உறுதிமொழி எடுத்து இருப்போம். குறிப்பாக தினமும் பள்ளியில் உறுதிமொழி எடுப்போம். உறுதிமொழி என்பது, செயலில், வார்த்தைகளில் உண்மையாக இருப்பதையும், அதனை நிறைவேற்றுவதையும் முன்கொடியே சொல்வது ஆகும்.
நாம் எடுக்கும் உறுதிமொழிக்கு பல்வேறு சொற்கள் உள்ளது. ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில், உறுதிமொழி என்பதை வேறு எப்படியெல்லாம் கூறலாம் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள், படித்து தெரிந்து கொள்ளலாம்.
உறுதிமொழி என்றால் என்ன.?
உறுதிமொழி என்பது, ஒரு விதிமுறையை நான் ஏற்கிறேன் என்று வாக்குறுதி அளிப்பதாகும். அதுமட்டுமில்லாமல், தன்னுடைய எண்ணங்கள், செயல்கள், அல்லது நடவடிக்கைகளில் உறுதியான நிலைப்பாட்டைக் காட்டும் வாக்குறுதி அல்லது கடமைப்படும் ஒரு செயல் ஆகும். உறுதிமொழி ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப மாறுபடும்.
பள்ளியில் மாணவர்கள் உறுதிமொழி எடுப்பார்கள். மாணவர்கள் ஒழுக்கநெறி பற்றியும், நாட்டின் விதிமுறைகளை ஏற்பேன் என்றும், எந்தவொரு தீய சொற்களை பேசவும் செய்யவும் மாட்டேன் என இதுபோன்ற உறுதிமொழிகளை எடுப்பார்கள்.
இதுவே, சமூக சேவை செய்யும் நபர்களாக இருந்தால், சமூக சேவைக்கான உறுதிமொழியை எடுப்பார்கள். இதுபோன்று உறுதிமொழி என்பது இடத்திற்கு இடம் மாறுபடும்.
உலக சுற்றுச்சூழல் தினம் உறுதிமொழி
உறுதிமொழி வேறு சொல்:
- உறுதிப்பாடு
- ஆணை
- திட்டவட்டம்
- வாக்குறுதி
- சத்தியம்
- காப்புறுதி
- தர உறுதி
மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் உறுதிமொழி என்பதற்கான வேறு சொற்கள் ஆகும். பெரும்பாலும், உறுதிமொழி என்பதை, ஆணை அல்லது வாக்குறுதி என்று கூறுவார்கள்.
உறுதிமொழி Meaning in English:
உறுதிமொழி என்பதை ஆங்கிலத்தில் Pledge என்று கூறுவார்கள்.
உறுதிமொழி எடுத்துக்காட்டு வாக்கியம்:
- நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு மனதோடு சேவை செய்யும் உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்.
- சுத்தமான சுற்றுப்புறத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்போம்.
- நாளை முதல் விரைவில் எழுந்திருக்கும் உறுதிமொழி செய்துள்ளேன்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |