உளவாளி என்பதன் வேறு சொல்.!

Advertisement

உளவாளி வேறு சொல் | Ulavaali Veru Sol in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் உளவாளி என்பதற்கான வேறு சொற்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். உளவாளி என்று கூறி கேட்டு இருப்போம். ஆனால், நம்மில் பலருக்கும் உளவாளி என்றால் என்ன என்பதே தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ள விரும்புவோம். எனவே, நீங்கள் உளவாளி என்பதன் வேறு சொல் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பொதுவாக, தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேறு சொல் என்பது இருக்கும். இதுபோன்ற வேறு சொற்கள் அடங்கிய கேள்விகள் தேர்வுகளில் அதிகமாக கேட்கப்படும். ஆகையால், வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால், நம் பொதுநலம் இணையதளத்தை பார்வையிடவும். நம் பொதுநலம் பதிவில் பல்வேறு சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். எனவே, இன்றைய பதிவில் உளவாளி என்பதன் வேறு சொற்கள் பற்றி பதிவிட்டுள்ளோம்.

காளை என்பதன் வேறு பெயர்கள்.!

உளவாளி வேறு சொல்:

  • வேவுகாரன்
  • உளவுகாரன்
  • உளவாள்
  • ஒற்றன்
  • உளவு பார்க்கும் ஆள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் உளவாளி என்பதற்கான வேறு சொற்கள் ஆகும்.

உளவாளி என்றால் என்ன.? 

உளவாளி என்பது, மற்றவர்களின் இரகசியத்தை தெரிந்துகொள்ளும் நபர் அல்லது மற்றவர்களின் தகவல்களை திருடும் நபர் ஆகும். ஒருவரின் அனுமதியின்றி அவர்களின் இரககிசயங்களை அறிந்து மற்றவர்களிடம் கூறும் நபர் ஆகும்.  எனவே, உளவாளி என்றால் உளவு வேலையில் ஈடுபடுபவர் என்று பொருள்படும்.

உளவாளி என்ற சொல் ஆனது, உளவு மற்றும் ஆள் என்ற சொற்களின் சேர்க்கை ஆகும். சூட்சுமமாக தகவல்களை சேகரிக்கும் நபரை குறிக்க பயன்படுகிறது.

உளவாளி Meaning in English:

உளவாளி என்பதை ஆங்கிலத்தில் Spy, Eavesdropper என்று கூறுவார்கள்.

உளவாளி எடுத்துக்காட்டு வாக்கியம்:

  • இந்த அரண்மனையில் என் எதிரி அனுப்பிய உளவாளி ஒருத்தன் இருக்கிறான். அவனை விரைவில் கண்டு பிடியுங்கள்.
  • என் உளவாளி, அவனுடைய இரகசியம் என்பதை அறிந்துகொள்ள சென்றிருக்கிறான்.
  • ஒவ்வொரு துறையிலும் ஒரு உளவாளி இருக்கத்தான் செய்கிறார்கள்.
  • உளவாளிகள் நல்ல விசயத்திற்காகவும் செயல்படுகிறார்கள் தீய விசயத்திற்காகவும் செயல்படுகிறார்கள்.
  • என் எதிரி என்ன திட்டம் வைத்திருக்கிறான் என்பதை என உளவாளியை அனுப்பி தெரிந்துகொள்கிறேன்.

மங்களம் என்பதன் வேறு சொல்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement