ஏழ்மை வேறு சொல் | Poverty Other Names in Tamil..!
பொதுவாக ஒரு மனிதனின் பிறப்பு மற்றும் இறப்பு என இவை இரண்டுமே சாதாரணமான ஒன்று தான். இதற்க்கு இடைப்பட்ட காலத்தில் உள்ள வாழ்க்கையினை தான் நாம் வாழ்கிறோம். அதன் படி பார்த்தால் ஒரு மனிதன் பிறக்கும் போது இருப்பது போலவே இறக்கும் போதும் அப்படியே இருப்பது கிடையாது. இதற்கு இடைப்பட்ட நிலையில் நம்முடைய வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அந்த வகையில் யாரும் யாருடைய வாழ்க்கையினையும் நிர்ணயம் செய்ய முடியாது என்பது தான் சாத்தியமான உண்மை.
ஏனென்றால் ஏழ்மையில் இருக்கும் ஒரு நபர் பணக்காரனாக ஆகலாம். அதேபோல் பணக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நபர் எப்போது வேண்டுமானாலும் ஏழ்மையாக வாழலாம். எனவே ஒவ்வொருவரது வாழ்க்கையும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பது நமது சூழலை பொறுத்து தான் அமையும். எனவே இன்று ஏழ்மை என்ற சொல்லிற்கான வேறு பெயர்கள் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஏழ்மை வேறு சொல்:
- வறுமை
- இல்லாமை
- மிடி
- இடர்
- மிடர்
- மிடிமை
- துன்பம்
ஏழ்மை என்ற சொல்லுக்கான வேறு பெயர்கள் மேல் சொல்லப்பட்டுள்ள இவை அனைத்தும் ஆகும்.
ஏழ்மை என்றால் என்ன..?
இவ்வுலகத்தில் பிறந்த ஒரு மனிதன் உணவு, உடை, பாதுகாப்பு, வீடு மற்றும் கல்வி என இன்றையமையாத இவை அனைத்தும் கிடைக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்றால் அதுவே ஏழ்மை எனப்படும்.
எடுத்துக்காட்டாக:
ராமு என்ற ஒருவன் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தான். ஆனால் அவனது சொந்த முயற்சியால் கல்வி கற்று இப்போது ஒரு பெரும் பணக்காரனாக மாறிவிட்டான்.
ஏழ்மையினை வகைகள்:
- ஒப்பீட்டு வறுமை
- முற்றிலும் வறுமை
ஏழ்மை எதிர்ச்சொல் தருக:
ஏழ்மை என்ற சொல்லுக்கான எதிர்சொல் பணக்காரன் என்பது ஆகும்.
ஏழ்மை Meaning in English:
ஏழ்மை என்ற சொல்லிற்கான நிகரான ஆங்கில வார்த்தை Poverty என்பது ஆகும்.
ஏழ்மை திருக்குறள்:
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
பொருள்:
வறுமையினை போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையை போல் துன்பமானது வறுமை ஒன்று மட்டுமே ஆகும்.
பிரமிப்பு வேறு சொல் | Piramippu Veru Sol in Tamil
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |