ஓட்டை என்பதன் வேறு சொல்..!

Advertisement

ஓட்டை வேறு சொல் | Otai Veru Sol in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஓட்டை என்ற சொல்லிற்கான வேறு சொல் என்ன.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பொதுவாக நாம் அனைவருமே நமக்கு தெரியாத விசயங்களை தெரிந்துகொள்ள விரும்புவோம். இவ்வுலகில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது. அவற்றில் ஒன்று தான் வேறு சொல். வேறு சொல் என்பது, ஒரு சொல்லிற்கு இணையாக வழங்கப்படும் சொற்கள் ஆகும்.

அதாவது, ஒரே பொருளினை குறிக்கும் பல சொற்கள் ஆகும். தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் வேறு சொற்கள் என்பது இருக்கும். ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஓட்டை என்பதற்கான வேறு சொல் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

ஓட்டை என்றால் என்ன.? 

ஓட்டை என்பது ஒரு சிறிய துளை ஆகும். வளி செல்லக்கூடிய ஒரு சிறு இடமே ஓட்டை எனப்படும். இந்த ஓட்டை என்ற சொல்லானது, பயன்படும் இடத்திற்கு ஏற்ப பல பொருட்களை தரும். மரம், சுவர், நிலம் முதலியவற்றில் உள்ள குழிவு அல்லது குடைவு ஓட்டை எனப்படும்.

விரோதம், விரோதி என்பதன் வேறு சொல் என்ன.?

எடுத்துக்காட்டு வாக்கியம்:

  • சட்டையில் ஓட்டை விழுந்து விட்டது.
  • அறையினுள் உள்ள ஓட்டை வழியே பாம்பு உள்ளே நுழைந்தது.
  • இதயத்தில் ஓட்டை இருக்கிறது.
  • ஓட்டை இருக்கின்ற பாத்திரத்தில் தண்ணீர் தூக்க வேண்டாம்.

ஓட்டை என்பதன் வேறு சொல்:

  • துளை
  • துவாரம்
  • பொந்து
  • குழி
  • குடைவு

மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் ஓட்டை என்ற சொல்லினை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும். பெரும்பாலும் ஓட்டை என்பதை துளை, துவாரம் என்று தான் கூறுவார்கள்.

விரைவு என்பதன் வேறு சொல் என்ன.?

ஓட்டை Meaning in English:

ஓட்டை என்பதை ஆங்கிலத்தில் Crack, Hole என்று அழைப்பார்கள்.

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement