கடவுள் வேறு பெயர்கள்
வாசகர்களுக்கு வணக்கம்..! இவ்வுலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் ஓர் பெயர் கட்டாயம் இருக்கும். அவ்வளவு ஏன் நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கு கூட நாம் ஒரு பெயரை வைத்து தான் அழைக்கின்றோம். அதுபோல மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே பெயர் என்பது எவ்வளவு முக்கியம் என்று நமக்கு தெரியும். சிலருக்கு ஒரு பெயர் மட்டும் இருக்கும். சிலருக்கு ஒன்றுக்கு மூன்று பெயர்கள் கூட இருக்கும். அதாவது வீட்டில் ஒரு பெயரை சொல்லி அழைப்பார்கள்.
வெளியில் ஒரு பெயரை சொல்லி அழைப்பார்கள். அப்படி மனிதர்களுக்கும் பொருட்களுக்கு மட்டும் தான் பல பெயர்கள் இருக்கிறது என்று நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் பேசும் வார்த்தைகளுக்கும் ஒன்றுக்கு பல பெயர்கள் இருக்கிறது. அதை நாமும் நம் பதிவின் வாயிலாக தினமும் தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று கடவுள் என்ற வார்த்தையின் வேறு பெயர்கள் என்னவென்று பார்க்கலாம் வாங்க..!
கடவுள் என்ற வார்த்தையை வேறு எப்படி எல்லாம் அழைக்கலாம்..?
பொதுவாக கடவுள் என்றால் என்னவென்று நம் அனைவருக்குமே தெரியும். இவ்வுலகில் பிறந்த அனைத்து உயிர்களையும் காப்பவர் தான் கடவுள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சிலருக்கு ஏதாவது கஷ்டங்கள் வந்தால் கடவுளே என்னை காப்பாற்றுங்கள் என்று சொல்வதை நாம் கேட்டிருப்போம்.
அப்படி இருக்கும் கடவுள் என்ற வார்த்தையை வேறு எப்படி எல்லாம் அழைக்கலாம் என்று இப்போது பார்ப்போம்.
ஆண் என்ற வார்த்தையை வேறு எப்படி எல்லாம் அழைக்கலாம்
- இறைவன்
- ஆண்டவன்
- தெய்வம்
- பகவன்
- பகவான்
- பரம்
- பூரணம்
- அநாதி
- ஆதி
- குரு
- முனிவன்
- தேவன்
தமிழ் கடவுள் முருகனின் 130 பெயர்கள்
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |