வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கடிதம் வேறு சொல்

Updated On: June 19, 2025 4:45 PM
Follow Us:
kaditham veru sol in tamil
---Advertisement---
Advertisement

கடிதம் வேறு சொல் | கடிதத்தின் வேறு பெயர்கள்

பொதுவாக நாம் தமிழில் கூறும் வார்த்தைகளுக்கான அர்த்தமானது நிறைய காணப்படும். ஆனால் நமக்கு எல்லா வார்த்தைகளும் தெரிந்திருக்காது. ஒரு சில அர்த்தங்கள் மட்டும் தான் தெரியும். ஒரு வார்த்தை தான,  ஆனால் நாம் பயன்படுத்தும் இடத்தை பொறுத்து அர்த்தம் மாறுபடும். அதனால் நீங்கள் வார்த்தைக்கான எல்லா அர்த்தத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய பதிவில் அர்த்தங்கள் மற்றும் வேறு சொற்கள் போன்றவற்றை தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கடிதம் என்பதற்கான வேறு சொற்களை பற்றி பதிவிட்டுள்ளோம்.

கடிதம் என்றால் என்ன.?

நம் முன்னோர்களின் காலத்தில் போன் வசதி எல்லாம் இல்லாத போது கடிதம் தான் எழுதப்பட்டது. இந்த கடிதத்தின் மூலம் தான் அவர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். கடிதம் எழுதியவர்களுக்கு  மறுக்கடிதம் எழுதுவார்கள். இந்த மறுக்கடிதம் வந்தால் தான் அவர்கள் நம்முடைய கடிதத்தை படித்து விட்டார்கள் என்பதையே அறிந்து கொள்ள முடியும். சுருக்கமாக கூறினால் இந்த கடிதம் ஆனது தகவல் பரிமாற்றத்துக்கு உதவுகிறது.

இப்போது இதனுடைய பயன்பாடு இல்லாமல் போகிவிட்டது. காரணம் போன் வசதி வந்து விட்டது, அதனால் கடிதம் யாரும் எழுதுவதில்லை. அதனால் இதனின் பயன்பாடு குறைந்து விட்டது. இதற்கு கடிதம் என்ற பெயர் மட்டுமில்லை, இதற்கு பல பெயர்கள் இருக்கிறது. அதனை பற்றி கீழ பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

கடிதம் வகைகள்:

கடிதமானது இரு வகைப்படும் அவை,

  • உறவுமுறைக்கடிதம்
  • தொழில்முறைக்கடிதம்

கடிதம் தலைப்புகள்

  • கடிதம் எழுதுபவரின் முகவரி
  • எதற்காக எழுதப்பட்டது
  • முடிவு
  • எழுதுபவரின் கையெழுத்து

மன்னிப்பு கடிதம் எழுதும் முறை

கடிதம் வேறு பெயர்கள்:

கடிதத்தை பல சொற்களால் அழைக்கலாம். அதனை பற்றி கீழே காண்போம்.

  • மடல்
  • திருமுகம்
  • கடுதாசி
  • ஓலை
  • ஏடு
  • அஞ்சல்

கடிதம் எழுதுவதால் கிடைக்கும் பயன்கள்:

கடிதம் எழுதுவதால் எழுத்து, சிந்தனை, தகவல் தொடர்பு, பொது அறிவு, பிறரை மதிக்கும் நற்பண்பு, நட்பினை வளர்த்தல் போன்ற பண்புகள் நம்மிடம் வளரும். மேலும் இந்த கடிதத்தினை எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பார்த்தாலும் சந்தோசம் இருக்கும். மிகுந்த ஞாபகமுள்ள பொருளாக இருக்கிறது.

கடிதம் எழுதுபவர் மற்றும் பெறுநர் இருவருக்கும் உள்ள அன்பு, நட்பு, காதல் போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.

கடிதம் in English:

கடிதம் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.

  • Letter
  • Communication
  • Missive

உறவுமுறை கடிதம் எழுதும் முறை..!

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now