கடுமை வேறு சொல் | Kadumai Veru Sol
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கடுமை என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக, தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லிற்கும் ஒரு அர்த்தமும் அதனை குறிக்கும் வேறு சொற்களும் இருக்கும. ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பள்ளியில் படிக்கும் புத்தகங்கள் முதல், அரசு தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்திலும் இந்த வேறு சொற்கள் என்பது இருக்கும்.
வேறு சொற்கள் என்பது, ஒரு சொல்லிற்கு/பொருளுக்கும் வழங்கப்படும் வேறு பெயர்கள்/சொற்கள் ஆகும். எனவே, வேறு சொற்கள் பற்றி நாம் அனைவருமே அறிந்துகொள்வது மிகவும் அவசியம். ஆகையால், வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில், நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றைய பதிவில் கடுமை என்ற சொல்லிற்கான வேறு சொற்களை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பரிவு என்பதற்கான அர்த்தம் மற்றும் வேறு சொல்
Kadumai Meaning in Tamil:
கடுமை என்பது கடினமான அல்லது சிரமமான நிலையை குறிக்கிறது. அதாவது, இயல்பான/வழக்கமான நிலையை விட கடினமான சூழ்நிலை கடுமை ஆகும். மேலும், கோபமாகவும் மனச்சாட்சி இல்லாமல் நடந்து கொள்வதையும் கடுமை என்று கூறுவார்கள். எடுத்துக்காட்டாக, மழைக்காலங்களில் வெளியில் சென்று பொருட்கள் வாங்குவது கடுமையாக இருக்கும். பல் வலி மிகவும் கடுமையாக இருக்கும். அவன் சண்டையில் மிகவும் கடுமையாக நடந்து கொண்டான்.
இதுபோன்ற கடுமை என்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபடும். எனவே, எங்கெல்லாம் கடினமான மற்றும் நமக்கு சாதகமற்ற சூழ்நிலை நிலவுகிறதோ அதனை கடுமை என்று கூறலாம்.
கடுமை என்பதன் வேறு சொல்:
- மூர்க்கம்
- பயங்கரம்
- வன்மை
- குரூரம்
- கொடுமை
- துன்பம்
- கொடூரம்
- ஆக்ரோஷம்
- இரக்கமின்மை
- கடினம்
- கோபம்
- சினம்
- சீற்றம்
- கண்டிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் கடுமை என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் ஆகும்.
கடுமை வாக்கியங்கள்:
- அரசு தேர்வுகளில் முதலிடத்தில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடுமையாக உள்ளது.
- போரின்போது வாழ்க்கை நடத்துவது மிகவும் கடுமை.
- சுதன் கடுமையாக படித்து தேர்வில் வெற்றி பெற்றான்.
கடுமை in English:
கடுமை என்பதை ஆங்கிலத்தில் Severity, Harshness, Cruelty என்று கூறுவார்கள்.
சம்பாத்தியம் என்பதன் வேறு சொல் என்ன.?
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |