கப்பல் வேறு பெயர்கள் | Kappal Veru Peyargal in Tamil..!

Advertisement

கப்பல் வேறு பெயர்கள் | Kappal Veru Peyargal in Tamil..!

பொதுவாக நாம் அனைவரும் நாம் வசிக்கும் ஊரினை தவிர மற்ற இடங்களுக்கு தான் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏனென்றால் வெளி ஊர்களுக்கு சென்றால் இதுநாள் வரையிலும் நாம் காணாத பல இடங்களை சுற்றி பார்க்கலாம். அந்த வகையில் பலரும் பூங்கா, கடல், மலைகள் உள்ள இடம் என இவற்றை எல்லாம் தான் பார்த்து ரசிப்பார்கள். அதிலும் கடல் பகுதிகளுக்கு செல்லும் போது படகு, கப்பல், அழகான குடிசை என இதுபோன்ற இடங்கள் நமது கண்ணை பரிக்கும் விதமாக மிகவும் அழகாக இருக்கும். அந்த வகையில் பலரும் படகில் சவாரி செய்யவும் செய்வார்கள். இதன் படி பார்த்தால் கப்பலில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலுமே கூட அது அவ்வளவு எளிதல்ல. அதோடு மட்டும் இல்லாமல் கப்பலிலும் பல வகைகள் இருக்கிறது. எனவே இன்றைய இவ்வாறு நாம் அடுத்தத்தடுத்த படியாக பேசி கொண்டிருக்கும் கப்பலினுடைய வேறு பெயர்கள் என்ன என்பதை தான் இன்று பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கப்பல் வேறு பெயர்கள்:

கப்பலின் வேறு பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

  • வங்கம்
  • பரிசில்
  • மிதலை
  • அம்பி
  • கலம்
  • படகு
  • கட்டுமரம்
  • புன்னை
  • நாவாய்
  • தெப்பம்
  • திமில்

கப்பல் என்றால் என்ன..?

 கப்பலை குறிக்கும் வேறு பெயர் என்னகப்பல் என்பது நீரில் செல்லக்கூடிய ஒரு வாகனம் ஆகும். அதாவது ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு கடல் பகுதி வழியாக மனிதர்கள் பயணம் செய்வதற்கு உதவும் ஒரு வாகனமே கப்பல் எனப்படும்.

மேலும் பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்தல், அண்டை நாடுகளில் இருந்து நமது நாட்டிற்கு வரும் பொருட்களை இறக்குமதி செய்தல் என இவ்வாறு பல வகையான பயன்பாடுகளை உள்ளடக்கிய ஒரு வாகனமே கப்பல்.

அதோடு மட்டும் இல்லாமல்  ஆரம்ப காலத்தில் கடல் வழி வணிகம் செய்ய முக்கிய அம்சமாக அமைந்த ஒன்று கப்பல் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

எடுத்துக்காட்டாக:

சீனாவில் இருந்து சரக்கு கப்பல்கள் மூலமாக எண்ணெய் மற்றும் இதர பொருட்கள் இந்தியாவிற்கு வணிக பயன்பாட்டிற்காக இன்று இறக்குமதி செய்யப்படுகிறது.

கப்பல் வகைகள் பெயர்கள்:

  1. பயணிகள் கப்பல்
  2. வணிக கப்பல்
  3. மீன்பிடி கப்பல்
  4. சிறப்பு நோக்க கப்பல்
  5. சரக்கு கப்பல்
  6. எண்ணெய்க் கப்பல்
  7. கொள்கலக் கப்பல்

கப்பல் வகைகளில் இவ்வாறு பல பிரிவுகள் இருந்தாலும் வணிக கப்பல்கள், மீன்பிடி கப்பல்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் என இவற்றில் தான் அடங்கும்.

கப்பல் in English:

கப்பல் என்ற தமிழ் சொல்லை குறிக்கும் சரியான ஆங்கில வார்த்தை Ship ஆகும்.

சிம்மாசனம் வேறு சொல் என்ன தெரியுமா

அல்லி வேறு பெயர்கள்

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement