வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கர்வம் என்பதை இப்படியெல்லாம் கூட சொல்லுவார்களா..!

Updated On: March 10, 2025 6:14 PM
Follow Us:
Karvam veru sol in tamil
---Advertisement---
Advertisement

கர்வம் வேறு சொற்கள் | Karvam Veru Sol in Tamil

நாம் அனைவருக்குமே ஒரு மாதிரியான ஆசை ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து தகவலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவு இருக்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம்.

ஆனால் அது சரியான தகவலைகளை நமக்கு அளிக்குமா என்றால் அது சிறிய சந்தேகம் தான். அதனால் தான் அப்படிப்பட்ட ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் கர்வம் என்ற சொல்லுக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

கர்வம் என்றால் என்ன..?

கர்வம் என்பது மனிதனின் ஒரு மோசமான எண்ணம் அல்லது மனப்பான்மை ஆகும். அதாவது ஒரு நபர் மற்றவர்களை மதிக்காமல் இருப்பவர் அத்தோடு மற்றவர்களை விட அடிப்படையில் தாங்கள் தான் மிகவும் உயர்ந்தவர்கள் என்னும் எண்ணம் கொண்டவர்களே கர்வம் நிறைந்தவர்கள் ஆவார்கள்.

உதாரணமாக தன்னை மிகவும் அறிவு நிறைந்தவராகவும் மற்றவர்களை குறைந்த அறிவு கொண்டவர்கள் என்று நினைப்பவர்களே மிகவும் கர்வம் கொண்டவர்கள். இந்த கர்வம் என்பதை வேறு சில சொற்களாலும் குறிப்பிடுவார்கள்.

அவை என்னென்னஎன்பதை பற்றி இங்கு காணலாம் வாங்க.

கர்வம் வேறு சொற்கள்:

கர்வம் வேறு சொற்கள்

  • ஆணவம்
  • திமிர்
  • வீம்பு
  • மமதை
  • அகந்தை
  • செருக்கு
  • வீராப்பு
  • ஆங்காரம்
  • அகம்பாவம்

மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் கர்வம் என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் ஆகும்.  இதுபோன்ற வேறு சொற்களை பயன்படுத்தி தான் தமிழ் மொழியில் கர்வம் என்பதை குறிப்பிடுவார்கள்.

கர்வம் எடுத்துக்காட்டு வாக்கியம்:

  • அவன் கர்வம் கொண்டவன் என்று பலபேர் கூறி கேட்டு இருப்போம். கர்வம் பெருமை கொண்டவன், அகங்காரத்தோடு இருப்பவன் என்றால் என்று அர்த்தம் ஆகும்.
  • கர்வம் கொண்ட மனிதன், எப்போதும் தனது வெற்றிகளை மட்டுமே பேசிக்கொள்வார்.
  • ஒருவருக்கு கர்வம் மட்டுமே ஆகவே ஆகாது. ஏனென்றால் கர்வம் வெற்றி பெறுவதற்கு தடையாக அமையும்.
  • உனக்கு மட்டும் திறமை இருக்கிறது என்று கர்வம் கொள்ளாதே.

கர்வம் Meaning in English:

கர்வம் என்பதை ஆங்கிலத்தில் Arrogance மற்றும் Pride என்று கூறுவார்கள்.

பொருத்தமான தகவல் 👇
மனம் என்பதை இப்படியெல்லாம் கூட சொல்லுவார்களா
அமைதி என்பதை வேறு எவ்வாறெல்லாம் குறிப்பிடலாம் தெரியுமா

 

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now