களைப்பு என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

களைப்பு வேறு சொல்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் களைப்பு என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். களைப்பு என்ற வார்த்தையை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். நாமும் கூறி இருப்போம். ஆனால், களைப்பு என்றால் என்ன.? களைப்பு என்பதை வேறு எப்படி எல்லாம் கூறலாம் என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் களைப்பு என்பதன் வேறு சொல் என்ன என்பதை கொடுத்துள்ளோம்.

தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அர்த்தமும் வேறு சொல் என்பதும் இருக்கும். இதனை நாம் பள்ளி புத்தகம் முதல் தற்போது எழுதும் தேர்வு வரை பார்த்து இருப்போம். எனவே, நம் அனைவருமே வேறு சொல் பற்றி அறிந்துக்கொள்வது அவசியம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு வகையான சொற்களுக்கான வேறு சொல் பற்றி பதிவிரு வருகிறோம்.  அந்த வகையில் இன்றைய பதிவில் களைப்பு வேறு சொல் பற்றி கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து  கொள்ளலாம்.

இடைஞ்சல் என்பதன் வேறு சொல் என்ன.?

Kalaippu Meaning in Tamil:

களைப்பு என்பது நாம் ஒரு வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது, சில நேரத்தில் அல்லது சில காலத்தில் அந்த வேலையை செய்ய முடியாத அளவிற்கு ஏற்படும் சோர்வு களைப்பு ஆகும். களைப்பில் இரண்டு வஃகைகள் உள்ளது. அதாவது, உடல் களைப்பு, மனக் களைப்பு என களைப்பு இரண்டு வகைப்படும்.

உடல் களைப்பு என்பது வேலை செய்யும்போது, உடலானது ஆற்றலை இழந்து சோர்வு நிலையை அடைவதாகும்.

மனக் களைப்பு என்பது, நமக்கு ஏற்படும் தனிமை, தோல்வி, இழப்பு, பொருளாதார நெருக்கடி மற்றும் வேலைப்பளு போன்ற காரணங்களால் மனதில் ஏற்படும் கவலை ஆகும்.

களைப்பு வேறு சொல்:

  • அசதி
  • சோர்வு 
  • அயர்வு
  • அயர்ப்பு
  • அயர்தி
  • அற்றம்
  • தளர்ச்சி
  • சலிப்பு

மேலே கூறியுள்ள சொற்கள் அணைத்தும் களைப்பு என்பதன் வேறு சொல் ஆகும்.

Kalaippu Meaning in English:

களைப்பு என்பதை Weariness, Lassitude மற்றும் Fatigue என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.

பணிப்பெண் வேறு சொல்..!

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement