கவனம் வேறு சொல் | Kavanam Veru Sol
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கவனம் என்ற சொல்லிற்கான வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக நாம் அன்றாடம் பேசும்போது பல தமிழ் சொற்களை பயன்படுத்தி வருகிறோம். அவை ஒவ்வொன்றிற்கும் வேறு சொற்கள் என்பதுஇருக்கும் . ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இதுபோன்ற தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும்.
எனவே, தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். எனவே, அந்த வகையில் இன்றைய பதிவில் கவனம் என்ற சொல்லிற்கான வேறு சொற்கள் என்ன என்பதை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
இறுமாப்பு என்பதன் வேறு சொல் என்ன.?
கவனம் என்பதன் பொருள்:
கவனம் என்பது, ஒரு செயலில் அல்லது ஒரு பொருளில் வேறு எந்தவொரு சிந்தனையும் இல்லாமல் ஒருநிலைப்படுத்தி இருப்பது ஆகும். அதாவது, செய்யும் செயலுடன் மனம் ஒன்றிய நிலையை தான் கவனம் என்கிறோம்.
கவனம் என்பது ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடும். அனைத்து விஷயத்திலும் கவனமாக எடுக்க வேண்டியது அவசியம்.
கவனம் வேறு சொல்:
- உன்னிப்பு
- உஷார்
- கவனிப்பு
- சாக்கிரதை
- சிரத்தை
- ஜாக்கிரதை
- பத்திரம்
- மும்முரம்
- விழிப்பு
- எச்சரிக்கை
- விழிப்புணர்வு
- ஈடுபாடு
மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் கவனம் என்ற சொல்லினை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும். பெரும்பாலும் கவனம் என்பதை ஜாக்கிரதை என்று தான் கூறுவார்கள்.
பராமரிப்பு என்பதன் வேறு சொல் என்ன.?
கவனம் Meaning in English:
கவனம் என்ற சொல்லினை ஆங்கிலத்தில் Attention என்று கூறுவார்கள்.
கவனம் என்பதன் எதிர்சொல்:
- கவனச்சிதைவு
- புறக்கணிப்பு
- கவனமின்மை
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:
- தமிழ்மாறன் பெரியவர்கள் சொல்லும் வார்த்தைகளில் கவனம் செலுத்தாமல் அவன் மனம் போன போக்கில் பேசி கொண்டிருக்கிறான்.
- ஓட்டுநர் பேருந்தை கவனமாக ஓட்டினால் விபத்து ஏற்படாமல் தடுக்கலாம்.
- செய்யும் செயலில் கவனமாக இருக்க வேண்டும்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.