கால் சிலம்பு என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

கால் சிலம்பு வேறு சொல் | Kal Silambu Veru Sol

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கால் சிலம்பு என்பதன் வேறு சொற்கள் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். கால் சிலம்பு என்று சொன்னதும் நம் நினைவிற்கு வருவது கண்ணகியின் கால் சிலம்பு தான். மதுரைக்கு வந்த கண்ணகி கோவலனிடம் எந்த ஒரு பண காசு இல்லாததால் செலவிற்காக கண்ணகி அணிந்திருந்த  சிலம்பை கோவலனிடம் கொடுத்து விற்று வருமாறு கூறினாள். அதனை விற்க கடை விதிக்கு கோவலன் சென்றான்.

பாண்டிய மன்னரின் மனைவி யின் சிலம்பை திருடினான் அவையின் பொற்கொல்லன்.  அதே நேரத்தில் காற்சிலம்புடன் கடை வீதியில் நின்ற கோவலனை கண்டதும் பொற்கொல்லன், கோவலனை அரசனிடம் பொய் கூறி சிறை பிடித்து கொடுத்தான். கண்ணகியின் கால் சிலம்பை உடைத்த போது அதிலிருந்து மாணிக்ககற்கள் தெறித்தன. அரசன் தன் மனைவியின் கால் சிலம்பை உடைத்த போது அதிலிருந்து முத்துகள் தெறித்தன. இதனால் கோபம் கொண்ட கண்ணகி மதுரையை எரித்தாள். இந்த கதையை நாம் அறிந்து இருப்போம். இதில் பலருக்கும் கால் சிலம்பிற்கு வேறு பெயர்கள் என்ன இருக்கும் என்பதை அறிந்துகொள்ள விரும்புவார்கள். ஆகையால், அவர்களுக்கு பயனுள்ள வகையில் கால் சிலம்பிற்கு வழங்கப்படும் வேறு சொற்கள் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.

தொண்டு என்பதன் வேறு சொல் என்ன.?

Kal Silambu in Tamil:

கால் சிலம்பு என்பது காலில் அணியப்படும் அல்லது பூட்டப்படும் ஒரு நகை ஆகும். கால் சிலம்பு என்பது அக்காலத்தில் உள்ள பெண்களால் இரு கால்களிலும் அணியப்பட்ட அணிகலன் ஆகும்.

சங்ககால தென்னிந்திய மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலன் ஆகும். கண்ணகி தனது கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார்.

கால் சிலம்பு என்பதன் வேறு சொல்:

கால் சிலம்பு என்பதன் வேறு சொல்

  • நூபுரம்
  • பாத கிண்கிணி
  • பரிபுரம்
  • ஞெகிழம்
  • சதங்கைச் சிலம்பு

மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் கால் சிலம்பு என்பதை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும். பெரும்பாலும்  கால் சிலம்பு என்பதை நூபுரம் என்று கூறுவார்கள்.  

எடுத்துக்காட்டு வாக்கியம்:

வாமன அவதாரத்தின் போது, மகாவிஷ்ணு உலகத்தை அளக்க தன் திருவடியைத் தூக்கினார். அது வானுலகை எட்டியது. பெருமாளின் திருவடியைக் கண்ட பிரம்மா மகிழ்ச்சியுடன் பாதங்களை கழுவி பூஜை செய்தார். அது பெருமாளின் நூபுரம் என்று சொல்லக்கூடிய கால்சிலம்பு மீது பட்டு தெறித்தது. அந்தத் துளிகள், பூலோகத்திலுள்ள அழகர்மலை மீது விழுந்து, தீர்த்தமாக மாறியது.

Kaal Silambu in English:

கால் சிலம்பு என்பதை ஆங்கிலத்தில் Anklet என்று கூறுவார்கள்.

வித்தியாசம் வேறு சொல்..!

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement