கும்மிருட்டு வேறு சொல்..! | கும்மிருட்டு வேறு பெயர்கள்..!

Advertisement

கும்மிருட்டு வேறு சொல்

வாசிப்பாளர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் கும்மிருட்டு வேறு சொல் பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த காலத்தில் உள்ள மக்கள் தமிழ் மொழியில் உள்ள பழமையான வார்த்தைகளை பயன்படுத்துவதே இல்லை. மாணவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தை பயன்படுத்துவதால் தமிழ் மொழிகளை பேசுவதும் இல்லை படிப்பதும் இல்லை. நம்மால் முடிந்த அளவு தமிழ் மொழியை பயன்படுத்தி தமிழ் வார்த்தைகளை அழியாமல் பயன்பாட்டில் வைத்திருப்போம்.

நாம் கற்றுக்கொள்ளும் ஒரு விஷயங்களை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் சொல்லி கொடுப்போம். அதுபோல் நாம் புதிதாக ஒரு வார்த்தையை கற்று கொண்டால் கூட நம் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம் செயல்திறன் மேம்படும். புதிதாக ஒரு விஷயங்களை அல்லது ஒரு வார்த்தைகளை கற்று கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். எனவே இந்த பதிவில் கும்மிருட்டு சொல்லுக்கான வேறு சொல் என்ன என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

அரசர்களுக்கு வீசப்படும் விசிறி என்றால் என்ன

கும்மிருட்டு வேறு சொல்:

கும்மிருட்டு என்றால் முற்றிலும் வெளிச்சமே இல்லாத ஒரு இருட்டான பகுதி என்று அர்த்தம்.

  •  அடர்ந்த இருள், காரிருள், வீங்கிருள், மையிருட்டு 

மையிருட்டு விளக்கம்:

மை +இருட்டு  = மையிருட்டு. மை எப்படி கன்னங்கரேலென்று இருக்குமோ அப்படிப்பட்ட தோற்றம் கொண்ட இருட்டு என்று பொருள்.

கும்மிருட்டு விளக்கம்:

கும்+இருட்டு = கும்மிருட்டு. அமாவாசை போன்ற நாட்களில் விளக்கு இல்லை என்றால் எங்கு பார்த்தாலும் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருக்கும். இதை கும்மிருட்டு என்று கூறுவார்கள்.

கும்மிருட்டு in English:

  • Pitch Darkness
  • Thick Darkness

எடுத்துக்காட்டு:

  • மின்சாரம் துண்டிக்கப்பட்டது, வீடு முழுவதும் கும்மிருட்டாக மூழ்கியது.
  • அடர்ந்த காடு மிகவும் அடர்த்தியாக இருந்ததால் பகலில் கூட அடர்ந்த இருள் பகுதியாக இருந்தது.
  • அவள் எதையும் பார்க்க முடியாமல், காரிருள் சூழ்ந்த அறையின் வழியாக தடுமாறி நடந்தாள்.
  • புயல் ஒரு இருண்ட இரவை உருவாக்கியது, இதனால் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது.
  • அவன் மையிருட்டில் ஒரு மரத்தில் நடந்து சென்று தலையில் காயம் அடைந்தான்.
  • என் வீட்டில் விளக்கு ஏரியாததால் வீங்கிருள் பகுதியாக மாறியது.

பிளவு வேறு சொல்

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement