குரங்கு வேறு பெயர்கள்
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் அனைவர்க்கும் அறிந்துகொள்ள நினைக்கும் குரங்கின் வேறு பெயர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குரங்கு பார்த்து விளையாடுவார்கள். அதாவது, குரங்கு பண்ணும் சேட்டைகளை பார்த்து மகிழ்வார்கள். வாழைப்பழம் ஒன்று கொடுத்தால் போதும், நம் பின்னாலே வந்து விடும்.
இப்படி குரங்கு பற்றி சொல்லப்போனால் சொல்லிக்கொண்டே போகலாம். பொதுவாக, பெரியவர்கள் குரங்கு என்று சொல்லி கூப்பிட கூடாது என்று சொல்வார்கள். குரங்கு என்று சொல்லி கூப்பிட்டால் குரங்கிற்கு கோபம் வரும். குரங்கினை குரங்கு என்று சொல்லி கூப்பிடாமல் வேறு எப்படி கூறுவது.? என்று தானே கேட்குறீர்கள். ஓகே வாருங்கள், குரங்கிற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்ன என்பதை இப்பதிவின் வாயிலாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
கொரில்லா குரங்கு பற்றிய உங்களுக்கு தெரியுமா..?
குரங்கிற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்:
- கவி
- கபி
- கோகிலம்,
- பிலவங்கம்
- யூகம்
- கோடாரம்
- அரி
- மந்தி,
- வலிமுகம்
- கடுவன்
- வானரம்
இதில் மந்தி என்பது பெண் குரங்கினை குறிக்கும் பெயர் ஆகும். அதேபோல், கடுவன் என்பது ஆண் குரங்கினை குறிக்கும் பெயர் ஆகும்.
அனுமன் குரங்குகள் என்று பேச்சு வழக்கில் நாம் அழைக்கப்படுகிற லங்கூர் குரங்குகளுக்கு கலை, மைம்முகன், கோலாங்கூலம், கள்வன், முசு, ஒரி என்று தமிழில் பெயர் இருக்கிறதாக்கும்.
குரங்கு பற்றிய சில தகவல்கள்:
குரங்கு என்பது பாலூட்டி இனத்தை சேர்ந்த விலங்கினம் ஆகும். பல வகையான குரங்கு வகைகள் உள்ளது. குரங்குகள், பழங்கள், தானியங்கள், சிலந்திகள், முட்டைகள் போன்றவற்றை உணவாக உண்ணுகிறது.
குரங்கிற்கு இரண்டு மூளைகள் உள்ளது. இதன் ஒரு மூளை அதன் வாளையும், மற்றொரு மூளை உடலையும் செய்லபட வைக்கிறது. பெரும்பாலும் குரங்குகள் மலை போன்ற காடு பகுதியிலும், வெப்பமண்டல இடங்களிலும் வாழ்கின்றன. இவ்வுலகில் பல்வேறு வகையான குரங்குகளில் மர்மோசெட் என்ற குரங்கு வகைகளும் ஒன்று. இவ்வகை குரங்கு உலகிலேயே மிகச்சிறிய குரங்கு வகை ஆகும். இவ்வகை குரங்கு அதிகபட்ச 20 சென்ரிமீட்டர் உயரம் வரை மட்டுமே வளரக்கூடியது.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |