Kelvi Veru Sol in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! தினம் ஒரு பயனுள்ள தகவலை நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் நம் பதிவின் வாயிலாக கேள்வி வேறு சொல் (Kelvi Veru Sol in Tamil) பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நமக்கு பல பெயர்கள் இருப்பது போல நாம் பேசும் வார்த்தைகளுக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. அப்படி நாம் பேசும் வார்த்தைகளில் ஓன்று தான் கேள்வி.
இந்த கேள்வி என்ற வார்த்தையை நாம் அதிகமாக கேள்விப்பட்டிருப்போம். அதுபோல இந்த கேள்வி என்ற வார்த்தைக்கு பல பெயர்கள் இருக்கின்றன. அந்த பெயர்கள் பற்றி தான் நம் பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ள போகின்றோம். அதனால் இந்த கேள்வியானது தேர்வு எழுதும் பொழுது அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க நண்பர்களே கேள்வி என்பதன் வேறு சொல் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
கேள்வி என்றால் என்ன..?
பொதுவாக கேள்வி என்பது தகவலுக்கான கோரிக்கையாக செயல்படும் ஒரு சொல் என்று சொல்லப்படுகிறது. கேட்டல் என்பதில் இருந்து தான் கேள்வி என்ற சொல் உருவாகிறது. கேள்வி இல்லாமல் மனிதனுக்கு வாழ்க்கையே இல்லை. ஒரு மனிதனின் ஆர்வத்தை தூண்டி விடுவது இந்த கேள்வி தான்.
கேள்விகள் இருப்பதால் தான், இன்று பல சாதனையாளர்கள் இவ்வுலகில் சாதனை படைத்திருக்கிறார்கள். அவவளவு ஏன் இவ்வுலகில் பல ஆராய்ச்சிகள், வளர்ச்சிகள் மற்றும் பல கண்டுபிடிப்புகள் உருவாவதற்கு காரணமே இந்த கேள்வி தான். எனவே கேள்வி என்பது நம் வாழ்க்கையின் ஒரு தூண்டுகோலாகும்.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால், அறிவியல் உருவாவதற்கு காரணமே கேள்வி தான். அதாவது ஏன் ஆப்பிள் கீழே விழுகிறது என்ற ஒரு கேள்வி தான் நமக்கு அறிவியலை கொடுத்தது. அப்படி கேள்வியால் தான் இவ்வுலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது.
சரி இந்த கேள்வி என்பதற்கான வேறு பெயர்கள் என்னவென்று கீழ் படித்து தெரிந்து கொள்ளலாம்.
கேள்வி வேறு சொல்:
- வினா
- செவிவழிச் செய்தி
- வினவல்
- சந்தேகம்
- விசாரணை
- கேட்பது
தொடர்புடைய பதிவுகள் 👇 |
காணிக்கை வேறு சொல் |
அற்புதம் வேறு சொல் |
கடினம் வேறு சொல் |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |