குறைவு, கம்மி, கொஞ்சம் வேறு சொல் | மலிவு வேறு சொல்
மொழிகளில் பல வகைகள் உள்ளது. நம்முடைய தாய்நாட்டில் தமிழ் மொழி தான் தாய்மொழியாக இருக்கிறது. இந்த மொழியினை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள். அதாவது நாம் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கான அர்த்தங்களும், அதற்கு பல சொற்களும் காணப்படுகிறது.
இது மாதிரியான கேள்விகள் அரசு தேர்வில் கேட்கப்படுகிறது. அதனால் நீங்கள் இதனை prepare செய்து கொள்வது அவசியமானது. நம்முடைய பதிவில் தினந்தோறும் வெவ்வேறு வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் மற்றும் வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கொஞ்சம் என்ற வார்த்தைக்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
கொஞ்சம் என்றால் என்ன.?
கொஞ்சம் என்ற வார்த்தையானது அதிகமாக பயன்படுத்த கூடிய வார்த்தையாக இருக்கிறது. நம்முடைய எல்லாரும் வீட்டிலும் கொஞ்சம் என்ற வார்த்தையானது அதிகமாக பயன்படுத்த கூடியது. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சொல்ல கூடியது.
எடுத்துக்காட்டாக நம்முடைய வீட்டில் வந்து யாராவது வந்து மிளகாய் தூள் வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு கொடுக்க கூடிய அளவில் இல்லாமல் கொஞ்சமாக இருந்தால், கொஞ்சம் தான் இருக்கிறது என்று கூறுவார்கள்.
அதாவது கொஞ்சம் என்ற வார்த்தையானது சிறிதளவு என்று கூட பயன்படுத்துவார்கள். பாத்திரத்தில் தண்ணீர் முழுவதுமாக இல்லை, சிறிதளவு தான் இருக்கிறது என்று கூட கூறுவார்கள். அது போல சாதம் பரிமாறும் போது கொஞ்சமாக சாதம் வை என்று கூறுவார்கள். அப்படி இருக்கும் போது இந்த வார்த்தைக்கு கொஞ்சம் என்று பயன்படுத்தாமல் நிறைய வார்த்தைகளை பயன்படுத்தலாம். நிறைய வார்த்தைகளை பற்றி அறிந்திருக்க மாட்டோம். ஏனென்றால் இந்த வார்த்தை தான் பேச்சு வழக்க சொல்லாக இருக்கிறது. அதனால் இந்த வார்த்தையே பயனப்டுத்தி கொண்டிருக்கிறோம். எல்லா வார்த்தைகளும் நமக்கு தெரிய வந்தால் அந்த வார்த்தைகளை பேச ஆரபிப்போம். உங்களுக்கு உதவும் வகையில் இதற்கான எடுத்துக்காட்டு மற்றும் வேறு சொற்களை பற்றி பதிவிட்டுள்ளோம். அதனை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
எடுத்துக்காட்டு:
- எனக்கு கொஞ்சமாக கேசரி தா.
- நாளை கொஞ்ச நேரம் விளையாடுவோம்.
கொஞ்சம் வேறு பெயர்கள்:
கொஞ்சம் என்ற வார்த்தைக்கான வேறு வார்த்தைகளை பற்றி கீழே அறிந்து கொள்வோம் வாங்க..
- குறைவு
- சிறிது
- சிறிதளவு
- கம்மி
- மலிவு
கொஞ்சம் in English:
கொஞ்சம் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் Little என்று அழைக்கலாம்.
| இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |













