கோந்து வேறு சொல் | Gondhu Veru Peyargal in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நாம் அனைவருமே நமக்கு தெரியாதவற்றை தெரிந்துகொள்ள தான் விரும்புவோம். அப்படி நாம் தெரிந்துகொள்ள நினைப்பது ஆங்கிலமாக இருக்கும். அதற்கு அடுத்ததாக, தமிழ் மொழியில் உள்ள சொற்களுக்கான வேறு சொற்கள். ஏனென்றால் தேர்வகளில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று தான் வேறு சொல்.
வேறு சொல் என்பது, ஒரே அர்த்தத்தை அளிக்கக்கூடிய வேறு சொற்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, வெறுப்பு என்பதை கோபம், என்றெல்லாம் கூறுவோம். இதுபோன்று தமிழ்மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேறு சொல் என்பது இருக்கும். ஆனால், அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் பல்வேறு சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் கோந்து என்பதற்கான வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.
கோந்து என்றால் என்ன.?
கோந்து என்பது ஒரு வகையான நீர் திரண்டு கட்டியாவது ஆகும். கோந்து என்பது தென்னக வழக்கு ஆகும். அதாவது, ஒரு வகையான திரவம் திரண்டு பசை போல் ஆவது தான் கோந்து. சில தாவரங்களில் அதன் சாரும், பிசின்பொருட்களும் அடங்கிய ஒட்டக்கூடிய பொருளாகும். இது பலசர்க்கரைப் பொருளால் ஆனது ஆகும்.
கோந்து ஆனது, பெரும்பாலும் மரப்பட்டைகளின் அடியில் இருக்கும். பல கோந்துகள் தவரங்களின் விதைப்பூச்சாக அமைகின்றன.
பரிகாரம் என்பதன் வேறு சொல் என்ன.?
கோந்து என்பதன் வேறு சொல்:
கோந்து ஆனது, பசை, பிசின் என்ற வேறு பெயர்களினாலும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும், கோந்து ஒரு பொருளோடு மற்றொருப் பொருளை ஒட்டப் பயன்படுத்தப்படுகின்றது.
இயற்கையான முறையில் மரங்களில் இருந்து எடுக்கப்படுவதை தவிர்த்து,செயற்கை முறையிலும் கோந்து தயாரிக்க படுகிறது. ஒவ்வொரு பொருட்களை ஒட்டுவதற்கும் ஏற்றவாறு பலவிதமான கோந்துகள் உள்ளது.
கோந்து in English:
கோந்து என்பதை ஆங்கிலத்தில் Gum என்று கூறுவார்கள்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.