சச்சரவு வேறு சொல்
பொதுவாக தமிழில் கூடி வாழ்ந்தால் குடும்பத்திற்கு கோடி நன்மைகள் என்று கூறினார்கள். இவ்வாறு கூறியதோடு மட்டும் இல்லாமல் அதற்கு உதாரணமாக ஒவ்வொரு குடும்பத்தினரும் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இப்போது உள்ள தலைமுறை மக்களாக இருந்தாலும் சரி அதற்கு அடுத்த தலைமுறையில் உள்ள மக்களாக இருந்தாலும் சரி இவ்வாறு இருப்பதற்கான வாய்ப்புகள் என்பது மிகவும் குறைவு. ஏனென்றால் கூடி ஒன்றாக அனைவரும் ஒரே குடும்பத்தில் வாழ்வது என்பது எண்ணற்ற சண்டை சச்சரவுகளை தான் உருவாக்கும் என்பதனால் ஒவ்வொருவரும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். மேலும் இதுபோன்ற சச்சரவுகள் குடும்பங்களில் மட்டும் இல்லாமல் வேலை பார்க்கும் இடம், படிக்கும் இடம் என இதுபோன்ற இடங்களிலும் காணப்படுகிறது. இவ்வாறு பல இடங்களில் ஒருவருக்கு ஒருவர் உறவில் சச்சரவுகளை ஏற்படுத்துதலை கூறும் இந்த சொற்களுக்கு வேறு என்னென்ன சொற்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சச்சரவு வேறு பெயர்கள்:
- தகராறு
- சண்டை
- வாக்குவாதம்
- வாதம்
- கலகம்
இத்தகைய பெயர்கள் அனைத்தும் சச்சரவு என்ற சொல்லுக்கான வேறு பெயர்கள் ஆகும்.
சச்சரவு என்றால் என்ன..?
பொதுவான ஒரு இடத்திலேயே அல்லது வீடு, கோவில் என இதுபோன்ற இடங்களிலேயோ இரண்டு நபர், இரண்டு மேற்பட்ட நபர் என இவர்களுக்குள் முதலில் விவாதங்களாக ஏற்படும்.
பின்பு அது பெரிய அளவில் சண்டைகளாகவும் வரக்கூடும். மேலும் இது இடத்திற்கு ஏற்றவாறு வேறுபடும்.
எடுத்துக்காட்டாக:
நேற்று நடைபெற்ற எனது உறவினர் திருமணத்திற்கு சென்றேன். அங்கு போய் பார்த்தால் காலையில் இருந்து மாலை வரை என ஒரே சண்டை சச்சரவாகவே இருந்தது.
சச்சரவு எதிர்ச்சொல்:
சச்சரவு என்பதன் எதிர்சொல் அமைதி ஆகும்.
சச்சரவு Meaning English:
தமிழில் உள்ள சச்சரவு என்ற சொல் ஆங்கிலத்தில் Controversy என்று அழைக்கப்படுகிறது.
ஐம்பூதங்களின் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Learn |