சதாவதானம் குறிப்பு வரைக
வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் சதாவதானம் என்றால் என்ன.? என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. சதாவதானம் என்பதை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். ஆனால், அதற்கான பதில் நமக்கு தெரியாது. சதாவதானம் என்றால் என்ன.? என்று யோசித்து கொண்டிருப்போம். ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் அதற்கான பதிலை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பொதுவாக நாம் அறியாத ஒரு சொல்லினை பிறர் கூற கேட்டால், குழப்பத்தில் இருப்போம். அதாவது, என்ன நமக்கு தெரியாத ஏதோவொன்றினை கூறுகிறார்களே என்று யோசிப்போம். எனவே, அந்த வகையில் நீங்கள் சதாவதானம் என்ற சொல்லினை அறிந்து அதற்கான பதிலை தேடிக்கொண்டிருக்கிறீர்களா.? அப்போ வாருங்கள் சதாவதானம் என்றால் என்ன.? என்பதை பார்க்கலாம்.
சதாவதானம் என்றால் என்ன.?
சதாவதானம் என்பது ஒரே நேரத்தில் நூறு விடயங்களை அவதானிக்கும் திறன் ஆகும். அஃதாவது, ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் 100 விஷயங்களை நினைவில் வைத்துக்கொண்டு அதன் பிறகு, அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான கேள்வியை அளிப்பதே சதாவதானம் ஆகும்.
சதம் என்பதற்கு நூறு என்பது பொருள் ஆகும் . ஒருவர் புலமை, நினைவாற்றல் மற்றும் நுட்பமான அறிவு பெற்று அதில் அவர் சிறப்புடையவராக இருக்கிறாரா என்பதை சதாவதானம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த ஞானம் பெற்ற செய்குத்தம்பி பாவலர் அவர்கள், 1907-ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் 100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி பாராட்டுப் பெற்றுச் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் எனப் போற்றப்பட்டார். தன்னை சுற்றி நடக்கும் 100 வித நிகழ்வுகளை கிரகித்துக்கொண்டு அது சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிக்கும் திறமை பெற்றிருந்தார்.
விகடகவி வேறு சொல் | Another Name of Vikadakavi in Tamil
சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர் செய்குத்தம்பி பாவலர் ஆவர்.பலதரப்பட்ட செயல்களை ஒரே நேரத்தில் செய்பவர் சதாவதானி கணேஷ். பலமொழிகளில் கவிதை எழுதும் ஒரு கவிஞர் ஆவர். அதுமட்டுமில்லாமல், சமஸ்கிருதம் மற்றும் கன்னட மொழியில் எழுதும் எழுத்தாளர் ஆவார். இவர் கன்னடம், சமசுகிருதம், தெலுங்கு மற்றும் பிரகிருதம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அவதான நிகழ்ச்சிகளை இவர் நிகழ்த்தியுள்ளார்.
அட்டாவதானி என்றால் என்ன.? | தசாவதானி என்றால் என்ன
ஒரே நேரத்தில் எட்டு செயல்களை அறிந்து, அதன் பிறகு, அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை அளிப்பது அட்டாவதானி அல்லது தசாவதானி என்று அழைப்பார்கள்.
சதாவதானி பட்டம் பெற்றவர்:
செய்குத்தம்பிப் பாவலர் மற்றும் தஞ்சை சதாவதனி சுப்ரமணிய ஐயர் ஆகியோர் சதாவதானி பட்டம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
சதாவதானம் வேறு பெயரகள்:
- அட்டாவதானி
- தசாவதானி
- பன்முக கவனத் திறன்
தொடர்புடைய பதிவுகள் |
கிரேடு பே என்றால் என்ன.? |
அனாதீனம் நிலம் என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா..? |
நடுகல் என்றால் என்ன |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |